நவம்பர் 06, 2015

குறளின் குரல் - 1296

6th Nov, 2015

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

                           (குறள் 1290: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

கண்ணின் - கண்ணால்
துனித்தே - என்னை வெறுத்தாள் (அல்லது ஊடினாள்)
கலங்கினாள் - மயங்கினாள்
புல்லுதல் - என்னோடு கூடியிருத்தலை
என்னினும் - என்னைவிட
தான் விதுப்புற்று - தான் விரைவாகக் கொள்ள

என்னுடைய காதலி கண்ணால் என்னவோ ஊடியபோல் வெறுப்பைத்தான் காட்டினாள்,  கொட்டினாள். ஆனால், என்னோடு கூடியிருத்தலுக்காக, மனமயக்கதால் விழைந்து, என்னைவிடவும் விரைந்தாள், என்று தலைவன் தலைவியின் புணர்ச்சி விதுப்பலை ஒருவித தன் ஆண்மையின் பெருமையாகவே கூறுகிறான் இக்குறளில்

Transliteration:

kaNNin tunittE kalanginAL pulludal
enninum tAnvidup puRRu.

kaNNin – With her eyes
tunittE – she exhits hate and dislike
kalanginAL –she is confused
pulludal – to be in union with me
enninum – more than me
tAn viduppuRRu – she was desirous

My maiden shows her dislike for me, with her eyes because of her love quarrel with me; but in her confused state, to be in union with me, she is more desirous and expedient than I am, says the man about her maiden, perhaps with a sense of pride.

“In her eyes, she showed feigned dislike and disgust;
 but, her expedient embrace exceeded mine, in thirst”

இன்றெனது குறள்:

ஊடினாள் கண்ணால் அதனின் விரைந்தென்னைக்
கூடினாள் என்னை விழைந்து

UDinAL kaNNAl adanain viraindennaik
kUDinAL ennai vizhaindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...