நவம்பர் 07, 2015

குறளின் குரல் - 1297

130: (Protesting with self  - நெஞ்சொடு புலத்தல்)

[After confiding with the friend about how her heart and mind hasten to be with her beloved, in this chapter, being annoyed by such desire from the heart, she is expressing her earnest protest to the heart and questions its intentions to lead her to her beloved ]

7th Nov, 2015

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

                           (குறள் 1291: நெஞ்சொடுபுலத்தல் அதிகாரம்)

அவர் நெஞ்சு - என்காதலர் மனமானது அவருக்கு கட்டுப்பட்டு
அவர்க்கு ஆதல் கண்டும் - என்னை நினையாதிருக்க அவர்க்கு உறுதுணையாய் இருக்கக் கண்டும்
எவன் நெஞ்சே - எக்காரணம் பற்றி, என்னுடைய மனமே
நீ எமக்கு ஆகாதது - நீ என் கருத்துக்கு உடன்படாதது?

என் நெஞ்சமே! நீ பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்! என் காதலர்தம் நெஞ்சம் அவருடைய எண்ணத்துக்கு உடன்பட்டு என்னைப்பற்றி நினையாமலிருக்கிறது. நீ ஏன், யாது காரணம் பற்றி அதுபோல என் எண்ணத்திற்கு உடன்படாது என்னை அவர்பால் ஈர்க்கின்றாய் என்று தலைவி தன் மனத்தோடு முறையிட்டு சண்டையிடுகிறாள். உனக்காகவாது தெரிந்திருக்க வேண்டும், அன்றி, அவருடைய நெஞ்சைப் பார்த்தாவது நீ செய்யவேண்டும். இரண்டும் செய்யவில்லையே என்று தலைவி நெஞ்சை நொந்துகொள்கிறாள்.

கலித்தொகையின் பல பாடல் வரிகள் இக்குறளின் கருத்தையொட்டி இருப்பதைக் காணலாம்.

“புலப்பென்யான் என்பேன்மன அந்நிலையே அவற்காணின்
கலப்பென் என்னுமிக் கையறு நெஞ்சே!” (கலித்தொகை: 67:8-9)

“ஊடுவென் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
 கூடுவென் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே” (கலித்தொகை: 67:12-13)

“துனிப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
தனித்தே தாழும் இத்தனியில் நெஞ்சே” (கலித்தொகை: 67:16-17)

“நிற்காணின்
கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னும் தம்மோ
டுடன் வாழ் பகையுடை யார்ர்கு” (கலித்தொகை: 77:22-24)

Transliteration:
avarnenju avarkkAdal kaNDum evannenjE
nIemakku AgA dads?

Avar nenju – that his heart is
Avarkk(u) Adal kaNDum – in his control and goes what he thinks
evannenjE – for what reason
nI emakku AgAdadu? – you’re not listening to my wish, O! my heart?

O! my heart! Don’t you see that his heart (my beloved) goes with his thought of “not thinking about me”? Why then are you, and for what reason, not in agreement with my similar thought and draw me towards him?, the maiden quarrels with her heart in this verse.  Either you should know on your own or must have the sense to emulate what the counter part does; you do neither! – is the implied tone of the maiden here!

“Don’t you see that his heart listens to his thought!
 For what reason do you not do the same O! heart!”

இன்றெனது குறள்:

அவரெண்ண மாற்றுமவர் நெஞ்சுகண்டும் நெஞ்சே
இவணதுபோல் ஆற்றாத தேன்?

avareNNa mARRumavar nenjukaNDum nenjE
ivaNAdupOl ARRAda dEn?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...