நவம்பர் 05, 2015

குறளின் குரல் - 1295

5th Nov, 2015

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

                           (குறள் 1289: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

மலரினும் மெல்லிது காமம் - பூவைவிட மென்மையானதாம் காதல் முயக்கம்
சிலர் அதன் செவ்வி - வெகு சிலரே அதற்குரிய காலமும் நேரமும் உணர்ந்து
தலைப்படுவார் - அதில் ஈடுபடுவார்.

பூவே மென்மையானது. அதனினும் மென்மையும், நுண்ணுணர்வும் கொண்டதே கலவியாம் முயக்கம். வெகு சிலரே அதற்குரிய காலமும், நேரமும் அறிந்து, உணர்ந்து அதில் ஈடுபடுவர். கருத்தொருமித்த இருவருமே அதற்குரிய குறிப்பும், ஏற்ற காலமும், இடமும் அறிந்து நுகர்தலே இன்பத்தைதரும். இவற்றில் ஒன்று வேறுபடினும், மலர் வாடுதலைப்போல காமமும் வாடும் என்பது குறிப்பு. நன்னேரம் என்பது பொதுவாக எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது என்பதால் அவ்வாறே கூறலாம்.

Transliteration:

Malarinum mellidu kAmam silaradan
Sevvi talaippaDu vAr

Malarinum mellidu kAmam – Softer than the flower is the delight of coition
Silaradan sevvi – A few know the appropriate time and place
talaippaDu vAr – and indulge in that.

Flower itself is soft in nature and unless handled carefully, can wilt, wither away as plucked. Such is the delight of coition; only a few know the appropriate place and time to indulge. A man and his partner must know the sign from each other, place and time to enjoy the fruits of it. Even if one of the above is not right, then the whole experience can be miserable. Since “good time” is the catch-phrase, indicative of sign, place and time, collectively, it is suffice to say, good time also.

“Delight of coition is softer than the soft flower blossom
 A few know good season for blissful union of twosome”

இன்றெனது குறள்:

முயக்கம் மலரினும் மென்மை அறிந்தோர்
முயல்வர்நன் நேர மறிந்து.

Muyakkam malarinum menmai aRindOr
Muyalvarna nEra maRindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...