ஊற்றெனவே பொங்கிவரும் இசைஞானம்
உள்ளத்தை உருக்குகின்ற குழலோசை
காற்றினிலே ஊடிவரும் கன்னலென
காதுகளில் கனிரசமாய் இனித்திருக்கும்
மாற்றிலாத பசும்பொன்னி லேபதித்த
மாணிக்கக் கல்வைர மணிமாலை
கூற்றுவனே கொள்ளையிட்டு கொண்டுபோனாய்
கூறுவதெம் முறையீட்டை எவரிடமோ?
போற்றுபுகழ் ரமணியவர் புகழிசையை
பூவுலகோர் சாற்றுவதை கேட்டிலையோ
வீற்றிருக்கும் வாகனத்தின் மேலிருந்து
வீசிவிட்டாய் பாசத்தை விளையாட்டாய்
தூற்றுவரே என்றெண்ணம் தோன்றாது!
துவள்வாளே இசைதேவி தெரியாது?
காற்றினைநீ தந்தந்த கானமுதம்
காதுகளில் ஒலித்திடநீ அருளாயோ?
நேற்றிருந்தார் நாளையென்றும் காண்பதில்லை
நோற்றுவரம் பெற்றாரும் யாருமில்லை
ஈற்றடியே இல்லாத கவிதையுண்டோ
இருந்தாலும் மனமேனோ பொறுக்கவில்லை
ஆற்றுபெற அவரிசையைத் தான்கேட்போம்
அந்தகனே அதையும்நீ பறித்துவிட்டாய்
நாற்றனெவே மீண்டவரை நிலம்பதித்து
நல்லயிசை விளைத்திடநீ தந்துவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam