9th Oct, 2015
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
(குறள் 1262:
அவாவயின்விதும்பல் அதிகாரம்)
இலங்கிழாய் - இலங்கு இழையே, அழகிய அணிகளணிந்த தோழியே
இன்று மறப்பின் - இன்று என்னவரை நான் மறந்துவிட்டால்
என் தோள்மேல் - என்னுடைய தோள்மேலிருந்து
கலம் கழியும் - ஆபரணமாகிய தோள்வளை அகலும்
காரிகை நீத்து - என்னழகை நீங்கச்செய்து.
தலைவனை பிரிந்து ஆற்றாதிருக்கிறாயே! அவனோ உன்னை நினைந்தானில்லை.
நீ அவனை மறந்துவிடுதலே உனக்கு நல்லது என்று கூறும் அவளுடைய அணிகளால் அலங்கரிங்கப்பட்ட
அழகிய தோழிக்கு, காதற் தலைவி இவ்வாறு கூறுவாள்: “அணிகளை பூண்ட அழகிய தோழியே.. இன்று
நான் என்னவரை மறந்துவிட்டால், என்னுடைய தோள்கள் மெலிந்து, வளைகள் கழண்டு விழும்; என்னுடைய
அழகும் குலைந்து என்னை நீங்கும்”
Transliteration:
ilangizhAi inRu
maRappinen thOLmEl
kalangkazhiyum
kArigai nIttu
ilangizhAi – O!
Friend, beautifully decked with ornaments
inRu maRappin – If I
forget my beloved (because he has left and has not come back)
en thOLmEl – From my
shoulders
kalam kazhiyum – the
bracelets for shoulders will fall off (because of slimming)
kArigai nIttu – that
will ruin my beauty
O! Maiden, you have not consoled yourself, because of your
beloved leaving you and has not come back; he has not even thought about you
either. It is better for you to forget him – insists the maidens’ friend beautifully
dressed up with ornaments. Maiden replies to her thus: “O! Friend that is
beautifully decorated with jewels! If I forget my beloved today, my shoulders
shall become slim further in pangs of separation, and the bracelets shall fall
off from my shoulders; my beauty also will ruin and leave me”
“O! Decked up
friend! If I forget my beloved, fearing this pain
Bracelets on my shoulders shall fall and my
beautiy also ruin.”
இன்றெனது குறள்:
அழகியே என்னவரை
நெஞ்சுநீக்கின் நீங்கும்
அழகொழித் தென்தோள் வளை
azagiyE ennavarai nenjunIkkin nIngum
azakozhit thenthOL vaLai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam