10th Oct, 2015
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
(குறள் 1263:
அவாவயின்விதும்பல் அதிகாரம்)
உரன் நசைஇ - வெற்றியை விரும்பி
உள்ளம் துணையாகச் - தம் ஊக்கமே துணையாய் கொண்டு (என் துணையைத்
புறந்தள்ளி)
சென்றார் - அவரோ சென்றுவிட்டார்.
வரல் நசைஇ - அவர் வரும் நாளில் விருப்புகொண்டு
இன்னும் உளேன் - இங்கு நானும் உயிருடன் உள்ளேன்
அவர் வெற்றியை
விரும்பி, தன் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்று விட்டார். நானோ அவர் திரும்பி வருவதை
விரும்பி இங்கு இன்னும் உயிர் வாழ்கிறேன் என்கிறாள் காதற்தலைவி, இக்குறளில்! இதில்
தலைவி என் துணையைப் புறம் தள்ளி தன்னுடைய ஊக்கத்தைத் துணைகொண்டு தலைவன் சென்றதை வருத்தமுடன்
சொன்னாலும், அதிலும் தலைவன் வெற்றியையே தேடிச் சென்றிருப்பதன் பெருமையும் ஒலிக்கிறது.
அதேபோல், அவள் தனது உள்ளக் கிடக்கையான, தலைவன் தன் வெற்றியையும் கருதாது, தன்னிடம்
வந்து அணைதலை விரும்புகிறாள் என்றும், அதற்காகவே உயிர் வாழ்கிறாள் என்பதும் தெரிகிறது.
Transliteration:
Urannasaii uLLam tuNaiyAkach chenRAr
Varalnasaii innum uLEn
Uran nasaii – desiring success in his pursuit
uLLam tuNaiyAkach – having his zeal as companion (not
desiring my company)
chenRAr – he left me
Varal nasaii – desiring his coming
innum uLEn – I keep myself alive
He has left desiring and seeking
success, with zeal as his companion. Here, desiring his coming back, I still
keep myself alive, says the maiden in this verse. There is subtle suggestion of
complaining tone that her beloved values his zeals’ companionship more than
hers; however there is tone of pride about his pursuing success, implied. She
also expresses that he should come back to her not even putting his success
ahead of her desire.
He has left desiring success in his pursuit, with zeal to his side
Here, I keep alive myself, desiring for his return, ignoring
pride”
இன்றெனது குறள்:
வெற்றி விழைந்தூக்கம்
தந்துணையாய் சென்றவர்தம்
பற்றில்
வழிபார்த்து நான்
veRRi
vizhaidUkkam tanthuNaiyAi senRavartam
paRRil
vazhipArttu nAn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam