அக்டோபர் 24, 2015

குறளின் குரல் - 1283


24th Oct, 2015

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
                           (குறள் 1277: குறிப்பறிவுறுத்தல் அதிகாரம்)

தண்ணந் துறைவன் - தண் நீர் நிலப்பரப்பின் தலைவனாம் என் காதலன்
தணந்தமை - கூடிப் பின் பிரிந்தமை பற்றி
நம்மினும் - நம்மை விட
முன்னம் உணர்ந்த - முன்னரே உணர்ந்து விட்டன
வளை - நம் வளைகள் (அதனால் கழண்டு விட்டன)

குளிர்ந்த நீர் பரப்பின் தலைவனாம் என்னுடைய காதலன் என்னுடன் கூடி மகிழ்ந்த பிறகு பிரிந்துவிடுவான் என்பதை என்னிலும் என்னுடைய வளைகள் ஏற்கனவே அறிந்தன போலும்; அதனால் அவை கழன்று விட்டன என்று தலைவி தன் தோழியிடன் கூறுகிறாள், இக்குறளில்!

Transliteration:

taNNan turaivan taNandamai namminum
munnam uNarnda vaLai

taNNan turaivan – that my beloved lover of cool shores
taNandamai – would leave me after being with me amorously
namminum -  more than us
munnam uNarnda  - earlier realized by my
vaLai – bangles (so they would come off my hands)

That my beloved lover of cool shores would leave me after being with me amorously was earlier realized by my bangles before and more than us, so that they would come off my hands, says the maiden to her friend.

“That my lover from cool shores would leave, after mating me,
 my bangles knew earlier than we knew; so, off hands they flee”

இன்றெனது குறள்:

தண்நீர் நிலத்தலைவன் நீங்கலை என்னிலும்
பண்டறிந்த தோவென் வளை

taNnIr nilattalaivan nIngalai ennilum

paNDaRinda dOven vaLai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...