25th Oct, 2015
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
(குறள் 1278: குறிப்பறிவுறுத்தல் அதிகாரம்)
நெருநற்றுச் சென்றார் - நேற்றுதான் என்னைப் பிரிந்து சென்றார்,
எம் காதலர் - என்னுடைய காதலர்
யாமும் - நானும்
எழுநாளேம் - ஏழு நாட்களுக்கு முன்பே பிரிந்தாற்போல்
(முன்பே பிரிவாரென்று ஏங்கி இன்புற்றிராமல்)
மேனி பசந்து - என் மேனியில் ஒளி இழந்தேன்.
என்னுடைய காதலர்
என்னைவிட்டு பிரிந்ததென்னவோ நேற்றுதான். ஆனால் என்னுடைய மேனியோ அவர் நெடுநாட்களாகப்
பிரிந்ததுபோல தன்னுடைய மின் இழந்தது பசலையுற்றதே. கடந்த இரண்டு குறள்களில் கூறியதுபோல், காதலன்
கூடியிருத்தலின் போதே வரவிருக்கும் பிரிவையும் உள்ளம்
உணர்வதால் காதற்பெண்டிர் பசலை கொள்ளும் நிலையைக் கூறுமிக்குறள்.
Transliteration:
nerunaRRuch chenRArem kAdalar yAmum
ezunALEm mEni pasandu
nerunaRRuch chenRAr – He left me only yesterday
em kAdalar – my lover!
yAmum – But I
ezunALEm – as if he left long time back (somehow
sensing he would leave)
mEni pasandu – my body lost lustre.
My lover left
me only yesterday; but my body has lost lustre as if he has been away for seven
days already (“many days” is implied). As said in the previous two verses, the
maiden feels the impending separation even when her lover is with her and hence
has lost her lustre.
“My lover left me only yesterday; but my
bodys’ lustre lost
already as if he has been away for long
leaving me to dust”
இன்றெனது குறள்:
என்னன்பர் சென்றதோ நேற்றாமென்
மேனியோ
மின்னழிந்த தேநெடுநாள் போல்
ennanbar senRadO nERRAmen
mEniyO
minnazhinda
dEneDunAL pOl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam