23rd Oct, 2015
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
(குறள் 1276:
குறிப்பறிவுறுத்தல் அதிகாரம்)
பெரிது ஆற்றிப் - என்னிடத்தில் பெரிதும் அன்பு பாராட்டி
பெட்பக் கலத்தல் - மேலும் மிகுதியாக என்னோடு கலவி விரும்புதல்
அரிது ஆற்றி - எனக்கு தாங்குதற்கு அரிதாம் பிரிவினை செய்து
அன்பின்மை - அன்பில்லாமல் ( விட்டுசெல்லுகின்ற )
சூழ்வதுடைத்து - குறிப்பினைக் கொண்டுள்ளது.
என்னிடத்தில் மிகுதியாக அன்பினைக் காட்டி,
மேலும் நாகன் மகிழும் வண்ணம் மீண்டும் மீண்டும் கலவி செய்து மகிழ்வித்ததெல்லாம், பின்பு
என்னால் தாங்கமுடியாத பிரிவைத் தந்து, அன்பில்லாமல் என்னை விட்டு நீங்குதற்கான குறிப்பையே
கொண்டதல்லாவா? என்று தலைவி தன் தோழியிடம் தலைவன் பிரிவதற்கான குறிப்பைக் கூறுகிறாள்.
Transliteration:
peridARRip peTpak kalattal aridARRi
anbinmai sUzva duDaittu
perid(u) ARRip – Showering love in excess
peTpak kalattal – and embracing me again and again
arid(u) ARRi – then doing what is difficult for me
to bear
anbinmai – without love
sUzva duDaittu – has that sign of leaving me
Showering his love and embracing me for
conjugal pleasure again and again, had the signs hidden, that he would leave me
without compassion giving me this unbearable pain of separation, laments the
maiden about her lover to her friend, about how she reads her lover.
“His showering of immense love and excessive pleasurable embrace
have signs of his impending
separation with out compassions’ trace!”
இன்றெனது குறள்(கள்):
மட்டிலன்
போடுமேலும் கூடல் குறிப்பன்றோ
விட்டென்னைச்
செல்லவன் பின்று!
maTTilan
bODumElum kUDal kuRippanRO
viTTennaich
sellavan binRu!
குறிப்பன்றோ
மட்டற்ற அன்புகாட்டி கூடல்
பிறிவாற்றி
துன்புசெய்ய பின்?
kuRippanRO
maTTaRRa anbukATTi kUDal
piRivARRi
tunbuseyya pin?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam