அக்டோபர் 20, 2015

குறளின் குரல் - 1279

20th Oct, 2015

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை 
அணியில் திகழ்வதொன்று உண்டு.
                           (குறள் 1273: குறிப்பறிவுறுத்தல் அதிகாரம்)

மணியில் - கோக்கப்பட்ட மணிமாலையில்
திகழ்தரு நூல்போல் - மணிகளுக்கு நடுவே அவற்றை ஒன்றிணைத்த நூல் தெரிவதுபோலே
மடந்தை அணியில் - அணங்கின் பெண்மையெனும் குணநலன்களைக் ஒன்றிணைக்கும் அழகிலும்
திகழ்வதொன்று உண்டு - குறிப்பாகத் தெரிவது உண்டு

என் காதலியின் தோழியே, மணிகளாலாகிய மாலையினைக் கோக்கும் இழையானது, மணிகளுக்கு ஊடே புலனாவது போலே, என் காதலியின் பெண்மையெனும் மாலையைச் அழகு செய்யும் மணிகளாம் அவளின் குணநலன்களைக் கோக்கும் இழையொன்றும் உள்ளது! ஆனால், அது எனக்குப் புலனாகவில்லை. நீ கண்டு சொல்லேன் என்கிறான் காதற்தலைவன். மணிகளால் ஆன அணியொன்றிருந்தால், அவற்றை கோக்கும் இழையொன்று வேண்டும் என்பது ஒரு துணிபு. ஆனால் அதைக் காணமுடியாவிட்டால் ஏற்படும் வியப்பு என்பதையே, குறிப்பாகச் சொல்லும் குறள்.

Transliteration:

maNiyil tigaztaru nUlpOl maDandai
aNiyil tagazvadonRu uNDu

maNiyil – in between the garland of beads strung
tigaztaru nUlpOl – the thread that strings the beads are seen
maDandai aNiyil – In the gardland of her beauty made of feminine attributes
tagazvadonRu uNDu – there is a binding thread hinted

O! Dear friend of my maiden, just as the thread that strings the beads or gems are seen in between the garland made of them, the garland of her beauty, made of the beads of feminine attributes must also be strung by a thread; it is definitely hinted; but I am not able to see it. Can you help me with it? – the man asks his maidens’ friend.

“There is a hint of thread that binds the femine attributes
 as the thread seen in between, that binds the gem beads”

இன்றெனது குறள்:

மணிகோத்த நூல்தெரியு மாப்போல் அணங்கின்
அணியில் குறிப்பொன்று உண்டு

maNikOtta nUlteriyu mAppOl aNangin

aNiyil kuRipponRu uNDu.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...