அக்டோபர் 21, 2015

குறளின் குரல் - 1280

21st Oct, 2015

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை 
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
                           (குறள் 1274: குறிப்பறிவுறுத்தல் அதிகாரம்)

முகை மொக்குள் - மலரவிருக்கும் மலர் மொட்டினுள்
உள்ளது நாற்றம்போல் - இருந்து இன்னும் வெளிப்படாத மணம்போல
பேதை - அறியா மங்கை
நகை மொக்குள் - மொட்டாக இருக்கும் புன்னகையிலும்
உள்ளதொன்று உண்டு - ஒரு காதற் குறிப்பு இருக்கிறது, அது இன்னும் வெளியில் தெரியவில்லை

இன்னும் மலராது மொட்டாக இருக்கும் மலரிலும் மணம் இருக்கிறது. மணம் என்பது மலர்ந்த மலரில்தான் என்பதல்ல! அதைப்போல, பெண்ணின் இன்னும் முழுவதுமாகப் பூக்காத புன்னகை அரும்புவதிலுல் அவள் உணர்த்தும் குறிப்பொன்று உண்டு! 

Transliteration:

mukaimokkuL uLLadu nARRampOl pEdai
nagaimokkuL uLLadon RuNDu

mukai mokkuL – in the about to blossom bud
uLLadu nARRampOl – resides hidden the fragrance
pEdai – in my innocent maidens’
nagai mokkuL – bud of smile
uLLadonRu uNDu – there hidden is some sign!

In the about to blossom flower bud, resides hidden a sweet fragrance; Likewise, in the bud like smile of my innocent maiden, resides some sign about her love for me, which is sweet and refreshing.

“Like the flower bud about to blossom, has fragrance hidden,
 there is a sign of her love in the smile of my lovely maiden”

இன்றெனது குறள்:

மலரா அரும்புள் மணம்போலே மங்கை
மலர்நகையும் சொல்லும் குறிப்பு

malarA arumbuL maNampOlE mangai

malarnagaiyum sollum kuRippu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...