அக்டோபர் 19, 2015

ஒற்றைத் தருவது கற்றுத் தருவது...


                    ஒற்றைத் தருவது கற்றுத் தருவது
                        முற்றுத் துறவெனும் ஒருநிலையே
                    பற்றை விடுவது சற்றும் எளிதிலை
                        கற்றுத் தெளிந்திட மனமிலையே
                    வெற்றிப் புகழென சுற்றித் திரிவது 
                        வெற்றுத் தொழிலென அறிந்திலமே
                    இற்று உடலமும் வற்றுஞ் சடலமாய்
                        குற்றித் தழலினில் எரிந்திடுமே

                    பற்றை விடுவிடு வெற்றுப் புகழதை
                        முற்றும் சதமென மொழியாதே
                    தெற்றி விழுவது சிற்றிச் சிதைவது
                        அற்று இருப்பது இயலாதே
                    மற்று உலகிது புற்றுக் குகையென
                        உற்று உணர்வது அறிவாமே
                    கற்றுத் தெளிந்திடு எற்றுக் கொளுயினி
                        ஒற்றை நிலையது உயர்வாமே
        
        
                            தெற்றி - இடறுதல்
                            சிற்றி - சஞ்சலப் படுதல்
                            எற்று - மனத்துணிபு

                            குற்றி - மரக்கட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...