அக்டோபர் 16, 2015

குறளின் குரல் - 1275

16th Oct, 2015

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
                           (குறள் 1269: அவாவயின்விதும்பல்அதிகாரம்)

ஒருநாள் - ஒரு நாள் என்பது
எழுநாள்போல் செல்லும் - பல நாட்கள் போல் (ஏழு என்பது நெடு நாள் என்பதற்கு குறிப்பு)
சேண் சென்றார் - தொலை தூரம் சென்றார்
வருநாள் வைத்து - அவர் திரும்பி வரும் நாளை, சுவற்றில் குறிவைத்து எண்ணி எண்ணி
ஏங்குபவர்க்கு - ஏங்குபவர்க்கு

நெஞ்சுக்கு நெருக்கமானவரை பிரிந்திருக்கும் ஒவ்வொரு கணமும் உண்மையான காதலருக்கு ஒரு யுகமாக விடிவது, சற்று மிகைப்படுத்தலாயினும் பொதுவழக்கு உரையாடல்களில் சொல்லப்படும் ஒன்று. அதேபோன்று, வள்ளுவரும் தலைவியின் கூற்றாக, ஒரு நாள் என்பது ஏழு நாளென்று சற்று மிகைப்படுத்தியுள்ள குறள் இது.

தொலைதூரம் சென்ற தம் கணவரைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நாளும், ஏழு நாட்களாக (இது ஒரு குறியீடுதான். ஆயினும் பல நாட்கள் என்பது உள்ளுரை) தோன்றுகிறது. சுவற்றில் அவர் திரும்பி வரும் நாளை குறியீடாக வைத்து எண்ணி எண்ணி தலைவியும் அதனால் வருந்துகிறாளாம்.

பரிமேலழகரின் பொதுவான அனுமானத்தின் படி, இக்குறளும் இருபாலருக்கும் பொருந்த வேண்டும். ஆயினும் பேறு காலங்களைத் தவிர, வேலை நிமித்தமாக பிரிந்திருப்பது பொதுவாக ஆண் மக்கள் என்பதால், இக்குறள் காதல் தலைவியின் எண்ணமாகவே கொள்ளவேண்டும்.

Transliteration:

orunAL ezunALpOl sellumchEN senRAr
varunALvaittu Engu bavarkku.

orunAL – A day feels and
ezunALpOl sellum – passes like seven days
chEN senRAr – That who has gone distantly
varunAL vaittu – Expecting a day coming back
Engubavarkku – and yearning for his return.

It is in common lore to say that each second being away from someone closer to heart would like an epoch, aeon! VaLLuvar has used a similar thought  of equating a day feeling like seven days in maidens’ mind.

Each day he has been away from the maiden feels like seven days (just a marker; but “more days” is implied) for her. She counts his return on the  wall and waits his arrival.

Though Parimelazagar, asserts that this chapter is common to both husband and his wife or two that are in love, typically a male would only go on his work away for long and it is common for the maiden or wife to wait his arrival. So it makes sense to interpret it as a thought of the maiden/wife.

“Each day feels like an epoch for her expecting the return
 of her beloved that has gone far away leaving her in pain”

இன்றெனது குறள்:

நீள்தூரம் சென்றார்மீள் நாள்பார்த் திருப்போர்க்கு
நாள்காணும் நீள்யுகம் போல்

nILtUram chenRArmIL nALpArt tiruppOrkku

nALkANum nILyugam pOl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...