அக்டோபர் 15, 2015

குறளின் குரல் - 1274

15th Oct, 2015

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
                           (குறள் 1268: அவாவயின்விதும்பல் அதிகாரம்)

வினை கலந்து - போரினிலே பொருந்தி
வென்று ஈக வேந்தன் - வென்று எனக்கு ஈயட்டும் எங்கள் வேந்தன்
மனை கலந்து - மனைக்குரியானைக் கூடி
மாலை - மாலை நேரத்தில்
அயர் - விளையாடி
கம் - பெரு வீடு பெற்றார் போன்ற இன்பம் துய்ப்பதை
விருந்து - விருந்தாக.

இக்குறளுக்கு பரிமேலழகர் உரையையொட்டியே தலைவன் கூற்றாகப் பெரும்பாலான உரைகள் உள்ளன; இவ்வதிகார இருபாலர் கூற்றாகவும் சொல்லப்படுவது என்பதே அவர் கருத்தும். அவருக்கு முந்தையவரான மணக்குடவர் உரையை மறுத்து அவர் இவ்வாறு கூறுகிறார். மணக்குடவரைப் போன்றே, இவ்வதிகாரம் தலைவியின் மொழிதலாகவே கருதவேண்டும். இக்குறள் பொருள் செய்ய சற்று கடினமாகத் தோன்றினும், சொற்களைச் சரிவர பிரித்தோமாயின் உள்ளங்கை நெல்லியே!

அயர் என்ற சொல்லை, அயர்ச்சி, சோர்வு என்று கொள்ளாமல், விளையாடு (கூடி முயங்குதல்) என்றே கொள்ளவேண்டும். கம் என்ற சொல்லும் வீட்டின்பம் என்பதைக் குறிக்கும். இப்போது குறள் சொல்லும் கருத்தைப் பார்ப்போம்.

“போரினிலே பொருந்தி எம்முடைய வேந்தர் வெற்றிகொள்ளட்டும்; அவ்வெற்றியினால் என் தலைவனும், நானும் கூடி முயங்கி விளையாடுதலை, எமக்கு விருந்தாக மாலை நேரத்தில் ஈயட்டும் எம் வேந்தர்” என்கிறாள் காதற்தலைவி.

நற்றிணைப் பாடலொன்றும் இக்கருத்தை ஒட்டியிருப்பதைப் பார்க்கலாம்.

“நெடுநா ஒண்மணி பாடுசிறந் திசைப்ப
மாலை மான்ற மணல்மலி வியனகர்த்
தந்தன நெடுந்தகைத் தேரே என்றும்
அரும்படர் அகல நீக்கி,
விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே” – (நற்றிணை: 361:5-9)

குறுந்தொகைப் (155: 6-7)பாடல் கூறுவதையும் காணலாம்.

“மாலை நனிவிருந் தயர்மார் தேர்வரும் என்னும் உரைவா ராதே”

இன்றைய இரண்டாவது குறளுக்கான காரணம், போர் செய்தமன்னன், முயங்கற் போர்க்கு தம் தலைவனை அனுப்பவேண்டும் என்பதற்காக.

Transliteration:

Vinaikalandu venRIga vEndan manaikalandu
mAlai ayargam virundu

Vinai kalandu – Winning in war
venR(u) Iga vEndan – let my king donate
manai kalandu – the pleasure of being with husband
mAlai – in the evening
ayar - playing
gam – and have the heavenly bliss
virundu – as my feast.

Most commentaries for this verse are based on Parimelazhagar who thinks that this verse is said from the perspective of both the maidend and her beloved, especially refuting the earlier commentator “maNakkuDavar”. But, the position of MaNakkuDavar seems to fit the beauty of the verse, if we split the words appropriately.

The word “ayar  is typically taken as “weariness”; but it also means “playing”; Likewise, “gam” means “heavenly bliss!”  With such intepretation, we can understand the meaning as below:  “Let my King win the war and donate the the pleasure of being with my belove in the evening and play for the heavenly bliss of togetheness”, wishes the maiden in love.

Verses from naRRiNai and Kurunthogai express similarly. Todays’ second alternative verse uses the war of lovemaking as a gift requested from the king for winning his war.

“Let my king win the war with enemie, to give me the gift of evening
 with my beloved to have the pleasure of togetheness till morning”

இன்றெனது குறள்(கள்)

போர்வென்றீ யட்டுமின்பம் வேந்துயாம் மாலையில்
சேர்ந்து முயங்கிகூடு தற்கு

pOrvenRI yaTTuminbam vEnduyAm mAlaiyil
sErndu muyangikUDu daRku

போர்வென்றீ யட்டுமின்பம் தார்வேந்து மாலையில்
சேர்ந்துயாம் கூடுபோர்செய் தற்கு

pOrvenRI yaTTuminbam tArvEndu mAlaiyil

sErnduyAm kUDupOrsei daRku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...