14th Oct, 2015
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்.
(குறள் 1267:
அவாவயின்விதும்பல் அதிகாரம்)
புலப்பேன்கொல் - ஊடி வெறுப்பேனோ?
புல்லுவேன் கொல்லோ - அல்லது கூடி மகிழ்வேனோ?
கலப்பேன்கொல் - அன்றி இரண்டு கலந்த நிலையில் நிற்பேனோ?
கண்அன்ன - கண்களைப் போன்ற அருமையான
கேளிர் வரின் - என்கணவர் வீடு வருகையில் (பிரிந்துசென்றார்)
என்னைவிட்டுப்
பிரிந்து சென்ற விழிகளை நிகர்த்த அருமையான என் கணவர், திரும்பி வீடு வரும்போது நான்
எந்த நிலையைக் கைக்கொள்வது? அவரை ஊடி வெறுத்து விலகியிருப்பதா? அன்றி கூடி அணைந்து
முயங்குவதா? அன்றி இவ்விரண்டு சேர்ந்திருக்கும் ஒரு நிலையிலிருப்பேனா? என்று தலைவி
குழம்புகிறாள்?
கண் அனையர் என்றாலும்
பிரிந்தமைக்காக ஊடுவது இயற்கை! அதனாலேயே ஊடியிருப்பதும் இயலாது கூடியிருப்பதையே மனமும்
விழைகிறது. இவ்விரண்டும் இல்லாத நிலையும் உண்டே.. உள்ளம் ஊடினாலும், உடல் விழையும்
இரண்டுமாய் இணைந்த நிலையும் கூடுமே! காதல் படுத்தும் பாட்டினை யாரே இத்தகையதென்று கணிக்கமுடியும்?
Transliteration:
pulappEnkol pulluvEn kollO kalappEnkol
kaNanna kELir varin
pulappEnkol – Will I show displeasure and be away?
pulluvEn kollO – Or go and embrace him?
kalappEnkol – Or would my feeling be mixed to do
both?
kaNanna – Precious like eyes
kELir varin – that my husband is, when arrives?
When my
husband, precious like eyes arrives, what would I do? Would I show my displeasure
and stay away or go and embrace him for having missed him so long or exhibit a
mixed feeling of heart in anquish, but the body in desire? Maiden is confused
with such thoughts.
Though
precious like eyes, the heart in anquish wants to exhibit anger and stay away;
but for the same reason, it is impossible to be away from him and the desire to
embrace him is also overwhelming! Perhaps it could be that the heart expresses
displeasure, but the body wants his embrace, a state combining both; Who can
understand fully the nature of heart in love? It seems to be a perpetual fix.
“Will I express my displeasure or
embrace him seeking pleasure? Or a mix
of
these two?, when my husband, precious like eyes arrives? I am in a fix”
இன்றெனது குறள்:
ஊடுவதோ கூடுவதோ சேர்ந்திரண்டும் செய்வதோயான்
வீடுவரும் கண்போன்றார்க் கு?
UDuvadO kUDuvadO
sErndiraNDum seivadOyAn
vIDuvarum kaNpOnRArk ku?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam