13th Oct, 2015
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
(குறள் 1266:
அவாவயின்விதும்பல் அதிகாரம்)
வருகமன் - வரட்டும்
கொண்கன் - என்னுடைய கணவர்
ஒருநாள் - ஒருநாள்
பருகுவன் - அன்று நான் ( என்னுடைய ஐம்புலன்களால் )
அருந்துவேன்
பைதல் நோய் - துன்பம் தருகின்ற என்னுடைய பசலை நோயானது
எல்லாம் கெட - முற்றும் கெட.
“என்னுடைய கணவர்
ஒருநாள் திரும்பித்தானே வருவார்.. வரட்டும்! அன்று நான் என்னுடைய ஐம்புலன்களின் வேட்கை
தணிய அவரை நுகர்வேன், என்னுடைய பசலை நோயானது முற்றும் கெட” என்கிறாள் காதற் தலைவி தன்
தோழியிடம்.
காதலின் தன்மையை அழகாகச் சொன்ன கவிதை இதையன்றி வேறில்லை. பருகுவன்
என்றதால், ஐம்புலன்களாலும் என்பது உள்ளுரைப் பொருள். கண்கள், காதுகள், வாய், நாசி,
மற்றும் மெய் என்றவன் ஐம்புல வெளிப்பாடுகளையும் நுகருவேன் என்கிறாள் காதற் தலைவி. வெறும்
புணர்ச்சியென்பது உடலின்ப நுகர்ச்சி மட்டுமே. அதையும் தாண்டி கருத்தொருமித்த காதலால்
மட்டுமே இவ்வாறு சிந்திக்கமுடியும்.
Transliteration:
Varugaman kONkan orunAL paruguvan
paidalnOi ellAm keDa.
Varugaman – let come
kONkan – my husband
orunAL – One day
paruguvan – I would devour him (that day with all
my senses)
paidal nOi – disease
of loss of lustre
ellAm keDa – to destroy completely.
“My husband
will come back some day. Let him come! I shall satiate by devouring by enjoying
him in totality for this disease of lack of luster to destroy completely”,
declares the maiden to her friend. When the maiden declares, “devouring” she
implies all the five sensory organs here.
It is a
beautiful poem and expresses that the true love is beyond the physical
relationship. She is consumed in his words, smell; eager for him to listen to
her words of love; seeing him and physically in his embrace – a total
consummate love.
“Some day my husband shall come home;
let him first arrive;
shall
consume him for loss of lustre to ruin, a pleasure drive”
இன்றெனது குறள்:
ஒருநாள்
கணவர் வருவாரே அன்று
பருகி பசலைநோய்தீர்
வேன்
orunAL kaNavar varuvArE anRu
parugi pasalainOitIr vEn.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam