அக்டோபர் 12, 2015

குறளின் குரல் - 1271

12th Oct, 2015

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
                           (குறள் 1265: அவாவயின்விதும்பல் அதிகாரம்)

காண்க மன் - காணட்டும்
கொண்கனைக் - என் கணவரைக்
கண்ணாரக் - என் கண்கள் தன்னுடைய ஆவல் தணிய
கண்டபின் நீங்கும் - அவரைக் கண்டபின்னரே நீங்கும்
என் மென்தோள் - என்னுடைய மென்மையான தோள்களின்
பசப்பு - படர்ந்தென்னை வாட்டுகிற பசலையாகிய நிறப்பொலிவின் குறைவு

என்னைவிட்டுச் சென்ற என்கணவர் வருகிறார் என்று கேள்விப்படுவது மட்டும் என்னை ஆற்று படுத்தி என்னுடைய பசலையைப் போக்காது. என்கண்களில் ஆவல் தணியுமளவிற்கு, அவரை நான் காணவேண்டும் அப்போதுதான் என்னுடைய மென்மையான தோள்களில் படர்ந்திருக்கிற பசலை நோயாம் பொலிவிழத்தலானது நீங்கும் என்கிறாள் தன் தோழியிடம் காதற்தலைவி!

Transliteration:

kANgaman koNganaik kaNNArak kaNDapin
nINgumen mentOL pasappu

kANga man – Let me see (first)
koNganaik – my husband (that has left and is about to come back)
kaNNArak – for my eyes to be satiated
kaNDapin nINgum – only after seeing him, will go away,
en mentOL – my soft, delicate shoulders’
pasappu – the loss of shine and color

The news of his coming back alone shall not console me. Let me see him with eyes for them to be satiated completely; then the loss of color and shine in my shoulders shall vanish too; so says the maiden to her friend, looking forward to the return of her beloved.

“ Let me see my returning husband first, for my longing eyes to be satiated!
  Then my delicate shoulders shall lose their sallowness and lustre regained!”


இன்றெனது  குறள்:

கணவரைக் கண்ணாரக் காண்பேன்யான் பின்னர்
சுணங்குமென் தோளின் பசப்பு

kaNavaraik kaNNArak kaNbEnyAn pinnar
chuNangumen tOLin pasappu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...