11th Oct, 2015
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
(குறள் 1264:
அவாவயின்விதும்பல்அதிகாரம்)
கூடிய காமம் - என்னை கூடி பின்பு
பிரிந்தார் - என்னை நீங்கிச் சென்றவர்
வரவு உள்ளிக்
- அவருடைய வரவினை எண்ணி, வருதலைக் காண
கோடு கொடு - மரத்தின் கிளைகளில்
ஏறுமென் நெஞ்சு - ஏறும் என்னுடைய நெஞ்சமானது.
காமம் நீங்கி என்னை
நீத்துச் சென்றவர் மீண்டும் வருவார் என்றெண்ணி, அவர் வரை எதிர்பார்த்து, மரத்தின் கிளைகளின்மேல்
ஏறி பார்த்திருக்கும் என்னுடைய நெஞ்சமானது, என்று தாம் தலைவன் வருகையை எதிர்பார்த்திருத்தலைக்
கூறுகிறாள் தலைவி. மற்ற குறள்களில் சொல்லியிராத ஒன்றையோ அல்லது வேறுவிதத்திலோ புதிதாகவொன்றும்
கூறாத குறள். அதிகார நிரப்பியாக இருக்கலாம்.
Transliteration:
kUDiya kAmam prindAr varavuLLik
kODuko DERumen nenju
kUDiya kAmam – after being in amorous closeness with
me
prindAr – my beloved who left me
varav(u) uLLik – Looking forward to his coming back
kODu koDu – on the branches of the tree
ERumen nenju – my heart shall climb
“After being amorously close with me, he
left me on his pursuit; Remembering that, I hope he would be back soon and I have climbed the tree branches looking for
him”, says the maiden in love. The verse does not say anything significantly
different and seems redundant.
“Looking for his return that left after being with me
my heart will climb the
branches of tree and see!”
இன்றெனது குறள்:
எனைக்கூடிப்
பின்சென்றார் தம்வரல் நோக்கி
பனையேறி
யும்பார்க்கும் நெஞ்சு
enaikkUDip pinchenRAr thamvaral nOkki
panaiyERi yumpArkkum nenju
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam