17th Oct, 2015
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
(குறள் 1270:
அவாவயின்விதும்பல் அதிகாரம்)
பெறின் என்னாம் - அவரை நான் பெறுவதாக இருப்பின்தான் என்?
பெற்றக்கால் என்னாம் - அப்படியே பெற்றுவிட்டாலும்தான் என்?
உறின் என்னாம் - அப்படியே பெற்றபின்பு கூடுவதனாலும்தான் என்?
உள்ளம் உடைந்து - என் உள்ளம் (அவர் பிரிந்து சென்றதனால்)
உடைந்து
உக்கக்கால் - உளுத்துப்போனப் பின்பு?
தோழி தலைவிக்கு
தலைவன் வந்துவிடுவான் என்று, ஆறுதல் சொல்லுவாள். அதற்கு தலைவி இவ்வாறு பதிலிறுப்பாள்:
என் உள்ளம் உடைந்து உளுத்துப்போன பிறகு, நான் அவரை மீண்டும் அடைவதாக இருந்தால்தான்
என்ன பயன்? அப்படியே அடைந்துவிட்டாலும்தான் என்ன பயன்? அடைந்ததோடு மட்டுமல்லாமல், கூடினாலும்
தான் என்ன பயன்?
உடைந்த உள்ளத்தளாயின
பிறகு முன்புபோல இயல்பாக இருக்கமுடியுமா என்று கேட்கிறாள் தலைவி.
Transliteration:
peRinennnAm peRRakkAl ennAm uRinennAm
uLLam uDaindukkak kAl?
peRin ennnAm – so what if there is a possibiiity of
getting him back again?
peRRakkAl ennAm –
so what If even I get him back really?
uRin ennAm – so what if I even a conjugal
relationship with him?
uLLam uDaindu – after my heart is broken (because of
his leaving earlier)
ukkak kAl? – and has become totally worn and
decayed?
Maidens’ friend consoles her saying that
her beloved would return soon, to which, the maiden says thus: After my heart
is broken and has become fractured and decayed, what use is it if my beloved plans
to retun or even returns or even if we have conjugal relationship. How can
there be a normal relationship here afterwards?
“So what if he plans to return or even returns, or even embraced?
After he has broken my
heart and it has decayed and bruised?”
இன்றெனது குறள்:
அடைவதால் என்னடைந்தும் என்பின் உடைத்தும்
உடையவுள்ளம் உற்றதுதான் என்?
(அடைவதால் என்? அடைந்தும் என்? பின் உடைத்தும், உடைய
உள்ளம், உற்றதுதான் என்?)
aDaivadAl ennaDaindum enpin uDaittum
uDaiyavuLLam uRRadutAn en?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam