அக்டோபர் 03, 2015

குறளின் குரல் - 1262

3rd Oct, 2015

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
                           (குறள் 1256: நிறையழிதல் அதிகாரம்)

செற்றவர் பின் - பகைத்தார்போல் என்னை அகன்று சென்றார்பின்னரே (என்காதலர்)
சேறல் வேண்டி  - சென்று அவரை அணைவதற்காக
அளித்து - என்மேலிரங்கி
அரோ எற்று - ஏனென்னை தள்ளுகிறது (அரோ என்பது ஓசை நயத்துக்கான அசைச்சொல்)
என்னை உற்ற துயர் - என்னை பீடித்திருக்கும் இக்காம நோயாம் துயர்?

தலைவன் விட்டுச் சென்றாலும், அவன் நினைவில் காம நோயானது அவள் நெஞ்சத்தை தள்ளுவதை காதற்தலைவி நொந்து இவ்வாறு கூறுவாளாம்.  பகைத்தார்போல் என்னை அகன்று சென்ற என் காதலர்பின்னே சென்று அவரை அணைய, ஏதோ என்மேல் இரக்கப்படுவதுபோல், இக்காம நோய் என்நெஞ்சத்தை அவர்பாள் தள்ளுகிறதே. நன்றாக இருக்கிறது? இது ஏனாம்? என்று நொடித்துக்கொள்கிறாள் காதற்தலைவி. இக்குறளில் தன் நெஞ்சையே வருத்தத்தோடு நையாண்டி செய்யும் பாவனை கொள்கிறாள் தலைவி.

Transliteration:

seRRavar pinchERal vENDi aLittarO
eRReNNai uRRa tuyar

seRRavar pin – beind the man that left me as if in enemity
chERal vENDi – to go and be with him
aLitt(u) – as if taking pity on me
arO eRR(u) – why does it push me? (What?)
eNNai uRRa tuyar – the disease of lust that engulfed me

In this verse the maiden wonders in a complaingn way, as to why the disease of lustful desire to be iwith her man, pushes her towards seeking him, though he left her as if he is an enemy. Though her beloved left her, she is sad that her desire pushes her heart to go after him and asks her heart why is that excellent? It is an expression of sarcasm in sadness used by the maiden in love.

“Why does this disease of lustful desire push me
 towards the man, left me as if he is an enemy?”


இன்றெனது  குறள்:

அகன்றார்பின் செல்லயெனைத் தூண்டலெதற் காக
அகத்துற்ற காமத் துயர்?

aganRArpin sellayenait tUNDaledar kAga
akattuRRa kAmat tuyar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...