செப்டம்பர் 11, 2015

ஞானதீபங்ளை நினைப்போம்...

நாள்: செப்டம்பர் 11, 2015
மார்கன் குன்றம், கலிபோர்னியா

இன்று இருபெரும் ஞான தீபங்களை நினைக்கும் நாள்.. சுதந்திர இந்தியாவைக் கனவு கண்ட மாமனிதர்கள்.. இன்றை அவலங்களைப் பார்க்காமல் போன புண்ணியர்கள்.. "வாராதுபோல் வந்த மாமணியைத் தோற்போமோ" என்று பதைக்கும் கணமெல்லாம் நெஞ்சில் தோன்றுபவர்கள்! அதாவது, எப்போதும்! சுவாமி. விவேகானந்தரையும், மகாகவி பாரதியையும் உள்ளாத உள்ளங்களுக்கு சுதந்திரத்தின் பெருமையும் அருமையும் எங்கே புரியப்போகிறது? அவர்கள் நினைவாக:
பாரதீ:
முறுக்கிய மீசையே முண்டாசே பொட்டே
நறுக்கெனப் பாடிய நாவே - செறுத்த
சிறுமதி வெள்ளையர்க்குச் சிம்மக் கனவாய்
தெறுத்ததீ யேபார தீ 
(தெறுத்த - சுட்ட)
விவேகானந்த ஜோதியே:
வங்கத்து வானில் முளைத்தெழுந்த வெள்ளியே
கங்குலில் கண்சிமிட்டிப் போனாயோ - எங்குளாய்நீ
தங்கமே ஞானவிவே கானந்த ஜோதியே
இங்குநீ வாராயோ இன்று?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...