செப்டம்பர் 12, 2015

குறளின் குரல் - 1241

12th Sep, 2015

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
                           (குறள் 1235: உறுப்பு நலனழிதல் அதிகாரம்)

கொடியார் - என்னைப் பிரிந்த கொடிய உள்ளத்தினர்
கொடுமை உரைக்கும் - அவருடைய எனக்கு செய்துள்ள கொடுமையினைக் கூறும்
தொடியொடு - வளைகளும் (கழன்று)
தொல் கவின் - பழைய இளமையின் எழிலும்
வாடிய தோள் - வாடி இழந்த தோள்கள்

வளைகள் நெகிழ மெலிதலும், தோள்கள் துவளுதலும் காதற் தலைவனைப் பிரிந்த பெண்டிருக்கு நேர்வதாக சங்க கால இலக்கியங்கள் பலவும் கூறுகின்றன. அதையொட்டியே இவ்வதிகாரமும் நெய்யப்பட்டுள்ளது. இக்குறளின், காதற் தலைவி, தலைவனைத் தன் பிரிவாற்றாமையை பொருட்படுத்தாமல், இன்னும் வராமல் இருப்பதால், கொடுமையானவன் என்கிறாள், தன்னுடைய வளை கழலவும், முந்தைய எழிலத் தோள்கள் தொலைக்கவும் காரணமான, கொடு நெஞ்சினர் செய்யும் ஊரார் தூற்றுவர் என்கிறாள்.

குறுந்தொகை (239:1) வரி, “தொடி நெகிழ்ந் தனவே தோள்சா யினவே” என்கிறது
 ஐங்குறுநூறு (28:3-4) வரிகள், “ ஒண்தொடி நெகிழச் சாஅய் மென் தோள் பசப்பது எவன்கொல் அன்னாய்”.

Transliteration:

koDiyAr koDumai uraikkum thoDiyoDu
tholkavin vADiya thOL

koDiyAr – the hard-hearted lover that left me
koDumai uraikkum – the cruelty are amply said
thoDiyoDu – with the (falling ) bracelet
thol kavin – what was originally and earlier beautiful
vADiya thOL – but now tired and drooping shoulders

Many old literary works have written about the bracelets falling off the hands of the maiden in love because of thinning, her shoulders wearied and drooping, when beloved has gone away on his professional pursuit or other reasons. This whole chapter is based on that premise. In this verse, the maiden says that the cruelty of the hard-hearted lover are amply said for others to know, by the bracelets falling of my thinning hand, and the drooping shoulers that were beautiful before meeting him, from her youthful days.

The cruelty of my hard-hearted lover will be spoken by all
 as the old beauty of my shoulders droop and bracelets fall”


இன்றெனது  குறள்:

தொடிகழன்று பண்டழகு வாடிய தோள்கள்
கொடியர்தம் கூரங்கூ றும்

(கூரம் - கொடுமை; தொடி-வளையல்)

toDikazhanRu paNDazhagu vADiya tOLgaL
koDiyartam kUrankU Rum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...