செப்டம்பர் 13, 2015

குறளின் குரல் - 1242

13th Sep, 2015

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
                           (குறள் 1236: உறுப்பு நலனழிதல் அதிகாரம்)

தொடியொடு - வளையொடு
தோள் நெகிழ - தோள்களும் கழல்வதுபோலாக
நோவல் - வருந்துவேன்
அவரைக் கொடியர் - அவரை பொல்லாரென்று
எனக்கூறல் நொந்து -அதன்கண் கூறுவது கேட்டு உளம் நொந்து

என் தோள்கள் மெலிந்து,கைவளைகள் கழலுவது கண்டு என் அன்பரை கொடியவர் என்று பிறர் கூறுகிறார்கள். அதைக் கேட்டு நான் நொந்து வருந்துகிறேன் என்று இக்குறளில் காதற் தலைவி கூறுகிறாள். சென்ற குறளின் மீள் பதிப்பாகவே இக்குறளும் தெரிகிறது.  மீண்டும் மீண்டும்  கண், தோள் ஆகிய இரண்டு உறுப்புகளைச் சுற்றியே இவ்வதிகாரம் பின்னப்பட்டிருப்பது வள்ளுவரின் கற்பனை நயத்துக்குச் சற்றும் பொருந்தாமல் இருக்கிறது.

Transliteration:

toDiyoDu tOlnegizha nOval avaraik
koDiyar enakkURal nondu

toDiyoDu – with her bracelet to slid
tOl negizha – her shoulders also thinned
nOval – I will feel pained
avaraik koDiyar – that he is cruel
enakkURal nondu – in grief that others call him so (as cruel)

My arms have become thin and my bracelts have slid from the hand; Seeing that people call him hard-hearted and that is painful to me, says the maiden who lover is away from her. This verse seems to be a repetition of previous verse; Once again a chapter filler verse and talking about only shoulders and eyes again and again does not show vaLLuvars’ imagination in good light.

“I am pained in grief that people call him cruel
 seeing my shoulder thinning and bracelets fall”


இன்றெனது  குறள்:

தொடிகழலத் தோள்மெலிய அன்பரைப் பொல்லாக்
கொடியரென்னல் நொந்துநோ வேன்

toDikazhalat tOlmeliya anbaraip pollAk
koDiyarennal nondunO vEn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...