11th Sep, 2015
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
(குறள் 1234:
உறுப்பு நலனழிதல் அதிகாரம்)
பணை நீங்கிப் - அவளது வளப்ப வனப்பு நீங்க
பைந்தொடி - பொன்வளைகள் அணிந்த பெண்
சோரும் - அவள் மெலிதலால் வளைகள் கழலும்
துணைநீங்கித் - அவளைக் கூடினாராம் துணைவர் நீங்கவும்
தொல் கவின் - பண்டு தொட்ட இயற்கை அழகுபெற்ற
வாடிய தோள் - ஆனால் இப்போது மெலிந்த தோள்கள்
மீண்டும் காதல் தலைவியில்
தோள்கள் அழகிழந்ததைப் பற்றிய குறள். காதற் தலைவியைக் கூடிய அவளது துணைவர் நீங்கவும்,
பண்டு தொட்டு அழகு மிக்க அவளது தோள்கள் மெலிந்து போகும். அவளது வளப்பமும், வனப்பும்,
நீங்க பொன்வளை அணிந்த காதற் தலைவி மெலிவாள் என்கிறது இக்குறள்.
Transliteration:
paNainIngip painthoDi sOrum thuNainIngith
tholkavin vADiya thOL
paNai nIngip – flourish and excellence gone
painthoDi – the maiden wearing golden bracelet
sOrum – has thinned for her bracelet to fall off
thuNainIngith – when her beloved leaves her
thol kavin – her former beauty in
vADiya thOL – the shoulders lost
Once again, a verse
about the maiden in love losing the beauty of her shoulders. When the lover of
the maiden leaves her, pining his separation, her formerly beautiful shoulders,
go thin and lose the beauty; When her flourish and excellence leave her, the
golden braceles she is wearing would also fall off her hands.
Since her lover left her, maidens’ former
charm of beautiful shoulders lost;
So will diminish her flourish; and her golden
bracelet also’ll fall, and be lost”
இன்றெனது குறள்:
கூடினார்
நீங்கவும் பண்டழகுத் தோள்களும்
வாடிவளை
சோர்வாள் மெலிந்து
kUDinAr
nIngavum paNDazhaguth thOLgaLum
vADivaLai
sOrvAL melindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam