10th Sep, 2015
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
(குறள் 1233:
உறுப்பு நலனழிதல் அதிகாரம்)
தணந்தமை - நீங்கியதை (காதற் தலைவன்)
சால - நன்கு, மிகவும்
அறிவிப்ப போலும்
- யாவரும் அறிய தெரிவிக்கும் (தளர்ந்து), போலும்
மணந்தநாள் - அவரை கூடிய நாளில்
வீங்கிய தோள் - மகிழ்ச்சியில் பூரித்திருந்த தோள்கள்
அவரை மணந்து கூடியிருந்த நாட்களில் வளமாய் பூரித்திருந்த என்னுடைய
தோள்கள், இன்று தளர்ந்து அவர் என்னை நீங்கியிருத்தலை
யாவரும் மிகவும் நன்றாக அறிய, அறிவிக்கின்றன போலும். பிரிவாற்றாமையில் தனது தோள்கள்
வாட்டமுற்றதைக் கண்டு ஏனென்று கேட்ட தோழிக்கு காதற்தலைவி இவ்வாறு கூறுகிறாள். தலைவன்
நீங்குகையில் தலைவி தோள்கள் நெகிழ்வதைக் குறுந்தொகைப் பாடல் இவ்வாறு கூறுகிறது.
“மணப்பின் மாணலம் எய்தித்
தணப்பின் ஞெகிழ்ப தடமெந்தோளே” (குறுந்தொகை:299:7-8)
Transliteration:
taNandamai cAla aRivippa pOlum
maNandanAL vIngiya tOL
taNandamai – That her lover went away
cAla – very well
aRivippa pOlum – announcing for others to
know (her weakening shoulders)
maNandanAL –
when he was with her after marrying her
vIngiya tOL – that swelled in pride and happiness
The shoulders that had swelled in
happiness and pride after marriage are weak and feeble now, perhaps announcing
to all, that he has gone away; for her friend who asks as to why her shoulders
are weak and feeble, the maiden in love gives the possible reason.
“The shoulders that swelled after marriage day in pride and
happiness,
have withered, as if to
announce to all, about his being away, in sadness
இன்றெனது குறள்:
கூடுநாள்
பூரித்த தோள்கள் பிரிவாலே
வாடும் பிறரறி
ய
kUDunAL
pUritta tOLgal pirivAlE
vADum
piRaraRi ya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam