செப்டம்பர் 22, 2015

குறளின் குரல் - 1251

22nd Sep, 2015

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
                           (குறள் 1245: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்)

செற்றார் எனக் - என்ன வெறுத்துவிட்டார் என்று
கைவிடல் உண்டோ நெஞ்சே - நான் அவரைக் கைவிடல் கூடுமோ, என் உள்ளமே?
யாம் உற்றால் - நான் அவரிடம் அன்பு செலுத்தினாலும்
உறாதவர் - அவ்வன்பைத் திருப்பிச் செலுத்தாதவராக இருப்பினும்

என்னுடைய உள்ளமே! என்னுடைய காதலர் நான் அன்பு செலுத்தினும், அவ்வன்பைத் தானும் காட்டாத இயல்பினராக இருக்கிறார். அதற்காக, அவர் என்னை வெறுத்தார் என்று நான் கொள்ளக்கூடுமோ? அன்றியும் அவரைக் நானும் வெறுத்து கைவிடவும்தான் இயலுமோ? இயலவே இயலாது என்பதைத்தான் தன் உள்ளத்தோடு உரையாடுதலால் தெரிவிக்கிறாள் காதற் தலைவி.

Transliteration:

cheRRAr enakkai viDalunDO nenjEyAm
uRRAl uRAa davar

cheRRAr enak – that he has rejected me
kai viDal unDO nenjE –shall I abandom him, O! My heart?
yAm uRRAl – though I love him and long his company
uRAadavar – and he does not reciprocate the same?

O! My heart! Though I love him and long for his being with me, he is not reciprocativea; because of that can I loathe him and wash him off? It is impossible to do so is what the maiden in love implies in this verse, by conversing her with heart!

“O! My heart is it possible for me to abandom my beloved
 though he is not reciprocative of my love, and ignored?”


இன்றெனது  குறள்:

உளமே! வெறுத்தார் எனவிட லாமோ
இளகாரென் றாலுமெனன் புக்கு?

uLamE! veRuttAr enavida lAmO
iLagAren RAlumennan bukku?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...