செப்டம்பர் 21, 2015

குறளின் குரல் - 1250

21st Sep, 2015

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
                           (குறள் 1244: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்)

கண்ணும் - என் கண்களயும்
கொளச் - உடன் காணச் கொண்டுச்செல்
சேறி நெஞ்சே - அவரைக் காணச்செல்லுகையில், என் உள்ளமே!
இவையென்னைத் - (இல்லையெனில்) இக்கண்கள்
தின்னும் - என்னை உண்ணுமே
அவர்க் காணல் உற்று- அவரைக் காணக் கருதி

என்னுடைய உள்ளமே, நீ அவரைக் காணச் செல்லும்போது என் கண்களையும் கூட்டிச் செல்வாயாக. இல்லையென்றால், அவரைக் காண விழையும் இக்கண்கள் என்னைக் உயிரோடு உண்ணுமே. ஏற்கனவே கண்கள் வாட்டமுற்றன; நெஞ்சே நீயும் வாட்டமுற்று நலிந்தாய். இப்போது நீ கண்களைக் கூட்டிச் செல்லவில்லையென்றால் என்னுடைய முழு உடம்பு நலியும்; ஆதலின் அது வாராதிருக்கச் செய்வாயாக.

Transliteration:

kaNNum koLachchEri nenjE ivaiyennaith
thinnum avarkkANal uRRu.

kaNNum – my eyes
koLach- to see take them with you
chEri nenjE – when you go to see him, my heart
ivaiyennaith – Otherwise, these eyes
thinnum – would eat me
avark kANal uRRu – wishing to see him.

O My heart, when you go to see my beloved, please, take my eyes also with you; otherwise, wanting to see him, these will eat me alive if not allowed, says the maiden in love and suffering the pangs of being separated from her beloved. Already you have become weak and now the eyes also have lost their lustre. If you don’t them with you, my entire body will perish in pain; so let it not happen, says maiden in this verse.

“O! My heart, please take my eyes with you to see my beloved
 Or else, they will eat me alive, in desire, if they are not allowed”


இன்றெனது  குறள்:

கண்களைக் கூட்டிச்செல் உள்ளமே அன்றியிவை
உண்ணுமே காணவெனைக் கொன்று

kaNgaLaik kUTTichchel uLLamE anRiyivai
uNNumE kANavenaik konRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...