20th Sep, 2015
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
(குறள் 1243:
நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்)
இருந்து உள்ளி - இவ்வாறு இறவாது வாழ்ந்து
என் பரிதல் நெஞ்சே - ஏன் பரிகிறாய் என் நெஞ்சமே?
பரிந்து உள்ளல் - இவ்வாறு பரிவோடு நினைவது
பைதல் நோய் செய்தார்கண் - உனக்கு பிரிவு நோயைத் தந்தவரிடத்தில்
இல் - இல்லையே
“ஓ நெஞ்சமே! இவ்வாறு வாழவும் இயலாமல், இறந்தும் படாமல், உனக்கு
இந்த பிரிவு நோயைத் தந்தவரிடம் ஏன் நீ பரிகிறாய்? அல்லது நினைந்து மருகுகிறாய். அவரிடத்தில்
உன்னை பரிவோடு நினைவதென்பது இல்லையே”, என்று நெஞ்சை விளித்து பிரிவாற்றாமையில் காதற்
தலைவி தனக்குள்ளாகப் புலம்புகிறாள்.
Transliteration:
irunduLLi enparidal nenjE parinduLLal
paidalnOi seidArkaN il
irundu uLLi – living (in misery) like this, without
dying
en paridal nenjE – why are you so compassionate to him O
my soul!
parindu uLLal – To compassionately think (about you)
paidal nOi seidArkaN – he who gave you this disease of
miserable separation
il – is not there.
“O! My soul! You live a miserable life,
compassionately thinking about him, pining within. Why are you so compassionate
to someone who has given you nothing but this miserable disease of paling? He does
not even think about you likewise” – the maiden laments addressing her own
soul.
Why suffer thinking of the man that gave this disease of
separation?
He does not even think about you like wise at least as
reciprocation”
இன்றெனது குறள்:
வாழ்ந்தெண்ணல்
பைதல்செய் வாரையேன் நெஞ்சமே
ஆழ்ந்தவன்பு
அற்றார் அவர்
vAzndeNNal paidalsei vAraiyE nenjamE
Azndavanbu aRRAr avar.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam