19th Sep, 2015
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
(குறள் 1242:
நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்)
காதல் அவர் இலர் ஆக - அவர் நம்மேல் காதல் இல்லாதவராக இருக்க
நீ நோவது - நீ ஏன் அவர் பிரிவை எண்ணி நொந்து கொள்கிறாய்
பேதைமை - அது உனது அறியாமை அன்றோ?
வாழியென் நெஞ்சு - நீ வாழ்க நெஞ்சமே
மீண்டும் தன் நெஞ்சைக் கடிந்து தலைவி இவ்வாறு
கூறுவாள்: நெஞ்சே நீ வாழ்க. நாம் காதல் கொண்ட நம்மவர், நம்மீது காதல் இல்லாதவராக இருக்க்,
நீ ஏகன் அவர் பிரிவை எண்ணி நொந்து கொள்கிறார் நெஞ்சமே? அது உனது அறியாமையன்றோ? இக்குறளில்
கடியும் குரல் இருப்பதால், வாழி என்றதும் கூட இகழ்ச்சியிலேயே என்று தோன்றுகிறது.
Transliteration:
kAdal avarilar AganI nOvadu
pEdaimai vAziyen nenju
kAdal avar ilar Aga – When, It is evident that who we love
is not reciprocative
nI nOvadu – why do you feel miserable about being
separated from him
pEdaimai – It is is your folly.
vAziyen nenju – Long love O my soul!
Once again, scolding her soul, the
maiden says thus: Long live my soul! When our beloved lover is not
reciprocative our love anymore, why should you feel miserable, because of his
leaving us? It is our folly! Since the verse has a tone of admonition, even
saying. “long live” seems sarcastic!
“Long live! My soul! When
the lover is not so anymore
Your feeling miserable is your folly! Don’t be so sore!”
இன்றெனது குறள்:
நெஞ்சேவாழ்
காதலில்லார் தம்வரவு நோக்கிநீ
துஞ்சாநோ
தல்மடமை யாம்.
nenjEvAz
kAdalillAr tamvaravu nOkkinI
tunjAnO dalmaDamai
yAm.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam