125: (Soliloquy to
heart - நெஞ்சொடு
கிளத்தல்)
[Overwhelmed
by the pain of separation, and without anyone to share her miserable state, the
maiden indulges in talking to herself, addressing her heart in this chapter.
This is more of a realistic state in separation; when there is none to share
any misery, a person indulges in dialogue with self; Whoever is there to share
the misery or to console will eventually leave the person to deal with the
misery on his or her own. Any misery for that matter eases over a period of
time, only self-healing, talking to ones’ mind and heart]
18th Sep, 2015
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
(குறள் 1241:
நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்)
நினைத்தொன்று சொல்லாயோ - எண்ணிப் பார்த்துச் சொல்ல மாட்டாயா
நெஞ்சே -
என் மனமே
எனைத்தொன்றும் - ஏதாகிலும்
எவ்வநோய் - இத் தீராத காதல் நோயைத் (அதனால் உற்ற பிரிவு
வேதனையை)
தீர்க்கும் மருந்து - தீர்க்கக்கூடிய ஒரு மருந்தினை?
ஓ! நெஞ்சே, எப்படியாவது இந்த தீராத காதல் நோயால் வந்த பிரிவாற்றாமை
துன்பத்தை தீர்க்கும் மருந்து என்னவென்று எண்ணிப்பார்த்து சொல்லமாட்டாயா என்று நெஞ்சைப்
பார்த்து கேட்கிறாள்.
நெஞ்சம்தான் துயரை உணர்கிறது, அவ்வாறு துயரில் இருக்கும் நெஞ்சத்துக்கு
என்ன தெளிவு இருக்கமுடியும். அது எவ்வாறு எண்ணமுடியும்? இது தருக்க சிந்தனைக்கு ஒவ்வாதே
என்று தோன்றலாம். காதல் நோய்பட்டவர்களுக்கு, அறிவு மயக்கம் இருப்பது இயற்கையே! அங்கே
தருக்கம் எப்படி இருக்கும் என்று நம்மை நாமே அமைதி படுத்திக்கொள்ளலாம்.
Transliteration:
ninaithonRu sollAyO
nenjE enaittonRum
evvanOi tIrkkum
marundu
ninaithonRu sollAyO – Won’t
you think and tell me?
nenjE– O! My
feeling heart
enaittonRum – any way
to (cure)
evvanOi -
incessant disease of love (the pain of separation because of that)
tIrkkum marundu – to cure
a medicine?
O! My heart, wont you think and find a medicine to cure
this incessant disease of love that gives me the pangs of separation?, asks the
maiden, her distraught heart.
In fact, it is the heart that feels the pangs. How then
would it be clear to give any meaningful solution or even find a cure, we may
ask! It may appear not to fit any logic! But, for those who’re afflicted by the
disease of love, it is natural not to have clear sense of thinking ability and
be in confused state; hence it is permissible for the maiden to ask her heart
in such daze!
“O! Heart, won’t
you think and tell me a medicine for cure
for this incessant disease of love to rid of
that for sure!”
இன்றெனது குறள்:
தீராநோய்
காதலது தீர மருந்தொன்றைத்
தாராயோ நெஞ்சேநீ
தேர்ந்து?
thIrAnOi kAdaladu tIra marundonRait
tArAyO nenjEnI tErndu?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam