செப்டம்பர் 04, 2015

குறளின் குரல் - 1233

4th Sep, 2015

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
                           (குறள் 1227: பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)

காலை அரும்பிப் - காலையில் முளைவிடும்
பகலெல்லாம் போதாகி - பகல்பொழுதெல்லாம் வளர்ந்து மலர்வதற்கு தயாராகும்
மாலை மலரும் - மாலையிலே மலரும்
இந்நோய் - இக்காதலாகிய நோய்.

இரவில் கனவில் வந்த காதலனோடு கலந்த பிறகு, விழிக்கையில் அவனுடைய நினைவில் அவளுக்கும் மீண்டும் காதல் நோய் அரும்புமாம்; அது பகல் பொழுது வளர வளர தானும் வளர்ந்து, மாலை நேரம் வந்தபிறகு மீண்டும் முழுவதுமாக மலருமாம். அது மலரைப் போல் அழகானது, இனிமையானது என்றாலும், நோயைப்போல் துன்பு தருவதால் அதுவே மலரும் நோயுமாம்.

மீண்டும் அதிகார நிரப்பி குறள் என்றே கருதலாம். மற்றபடி சிறப்பாகச் சொல்ல வேறில்லாத குறள்.

Transliteration:
kAlai arumbi pagalellAm pOdAgi
mAlai malarumin nOi

kAlai arumbi – buds in the morning
pagalellAm pOdAgi – grows in to blossoming stage during the afternoon
mAlai malarum – blossoms in the evening
in nOi – this malady of love sickness

After being with the beloved in dreams the previous night, when the maiden wakes up, the love sickness buds again, consumed in his thoughts, and grows to blossoming stage during the afternoon and in the evening it blossoms completely. Though it is sweet and pleasurable, it is also a malady that is painful to the maiden.

There is nothing enchanting about this verse; at best this verse is only chapter filler.

Buds in the morning, grows during the day and be ready
to blossom by evening, this painful grief that is a malady”


இன்றெனது  குறள்:

காலை முளைக்கும் பகலில் வளர்ந்திடும்
மாலையில்பூக் கும்காதல் நோய்

kAlai muLaikkum pagalil vaLarndiDum
mAlaiyilpUk kumkAdal nOi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...