3rd Sep, 2015
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
(குறள் 1226:
பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)
மாலை நோய் செய்தல் - இம்மாலையானது, இவ்வாறு பிறிவாற்றா நோயைத்
தரக்கூடியது என்று
மணந்தார் அகலாத காலை - என்னை மணந்த என்னுடைய அன்பர் என்னை நீங்காத
வரைக்கும்
அறிந்ததிலேன் - நான் அறிந்திருக்கவில்லை.
காதற் தலைவி, மாலை
நேரத்தில் வருமை பிரிவாற்றாமை நோய் எத்துணைக்
கொடியது என்பதை, அவளின் காதற்தலைவன் அவளை விட்டு நீங்காத வரைக்கும் அறிந்திலள் என்று
கூறுகிறாள். பொதுவாக, இன்னார் வரை, இன்ன துன்பம் இருக்குதென்ற உண்மை அறிந்திலேன் என்று
பொதுவாக பலரும் பலவற்றுக்காக அங்கலாய்ப்பதுண்டு.
கீழே சொல்லப்படும்
குறுந்தொகைப் பாடல் வரிகள் இதே நிலையைச் சுட்டுவதைக் காணலாம்.
“சிறுபுள் மாலை யுண்மை
அறிவேன் தோழியவர்க் காணா வூங்கே” (352:5-6)
“தண்ணந் துறைவன் தணவா வூங்கே
வாலிழை மகளிர் விழவணி கூட்டும்
மாலையோ அறியேன் மன்னே மாலை” (386:2-4)
Transliteration:
mAlainOy seidal maNandAr agalAda
kAlai aRinda dilEn.
mAlai nOy seidal – that evenings give me the pain and
the disease of separation
maNandAr agalAda kAlai – when my lover was with me, not
leaving
aRinda dilEn – I would not know.
The maiden in love laments that she had
not known the pain and the disease of separation untill lover did not leave
her. It is most common to feel about a few precious things in life, that until
they were not there, we would not realize what pain it is not having those
things. This verse expresses her pangs from that point of view.
The painful nature of of evenings without
the beloved, have been said in many literary works by many poets of old times
to modern times. A famous melody of modern times, “mAlaip pozhudin
mayakkattilE” expresses the same sentiment.
“Did not know until my lover did not leave me
about how painful these evenings
could be!”
இன்றெனது குறள்:
அன்பர் அகலாத
அன்று அறிந்திலன்
துன்புசெயும்
மாலை யென
anbar
agalAda anRu aRindilan
tunbuseyum
mAlai yena
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam