2nd Sep, 2015
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
(குறள் 1225:
பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)
காலைக்குச் செய்த நன்று என்கொல் - காலைப் பொழுதுக்கு யான்செய்த நன்மை என்ன?
எவன்கொல்யான் - என்ன நான் செய்தேனோ
மாலைக்குச் - மாலைப் பொழுதுக்குப்
செய்த பகை - பகையன்ன தீமை?
துன்பம் தரும் இரவினை முடியச் செய்து, என்னைத் துன்பத்திலிருந்து
விடுவிக்க வந்த காலை பொழுதுக்கு என்ன நன்மை செய்துவிட்டேன் என்று என்னை அது காப்பாற்ற
வந்தது? அதே நேரம் காதலர் பற்றிய நினைவில் மூழ்கி நான் மீண்டும் துன்புற வந்த மாலைப்
பொழுதுக்கு நான் என்ன தீமை செய்துவிட்டேன்?
காதலியின் கண்ணோட்டத்தில் காலையும், மாலையும் எவ்வாறு தோன்றுகின்றன
என்பதைப்பற்றிய நயமான கற்பனை
Transliteration:
kAlaikkuch seidananRu enkol evankolyAn
mAlaikkuch seida pagai?
kAlaikkuch seidananRu enkol – What good did I do
for the morning time?
evankolyAn- What did I
mAlaikkuch – to the evening
seida pagai? – do like a foe?
Making the night that gives me so much
misery to be over, the morning that arrives; what good have I done to the
morning for being so compassionate. At
the same time, what have I done to the evening? Why does it, like a foe, comes
back to torment me again and again?
Valluvar expresses his nice imagination
about the morning and evening from the perspective of the maiden in love.
“What good have I done to the plesant morning ?
and What bad have I done like a foe to evening?
இன்றெனது குறள்:
காலைப் பொழுதுக்கு
யான்செய் நலமென்ன?
மாலைக்குச்
செய்தீமை என்?
kAlaip
pozhudukku yAnsei nalamenna?
mAlaikkus
seitImai en?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam