1st Sep, 2015
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
(குறள் 1224:
பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)
காதலர் இல்வழி - காதலர் பிரிந்திருக்கும்போது
மாலை - வருகிற மாலைப் பொழுது
கொலைக்களத்து - கொலை செய்யும் இடத்தே
ஏதிலர் போல வரும் - கொலைஞரைப் போல வரும்
காதலர் என்னுடன் இருந்தபோதெல்லாம் வாழ்வளிக்க
வந்த மாலைப் பொழுது, இப்போது அவர் என்னுடன் இல்லாத நேரத்தில், கொலைகளத்தில் வாளேந்தி
கொல்ல வருகிற கொலைஞரைப் போல் வருகிறது. காதலன் பிரிவாற்றாமையில் இருக்கும்போது, அவனுடன்
முயங்கிக் கிடந்த மாலை நேரம் வந்து, அவனைப் பற்றிய நினைவுகளைத் தூண்டி அவளைத் துன்புறுத்துவதை இவ்வாறு கூறுகிறாள் காதற்
தலைவி.
Transliteration:
kAdalar ilvazhi mAlai kolaikaLattu
Edilar pOla varum
kAdalar ilvazhi – when the lovers are away from each
other,
mAlai – the evenings
kolaikaLattu – (feel like ) how in the slaughter
place
Edilar pOla varum - the executioner comes to kill
When my beloved was with me, the
evenings were lively and gave me life; Now that he is away, the evenings feel
like how slayers come to the slaughterhouse to kill, says the maiden. Every
evening, during his absence makes her feel like a killing slayer, approaching
her.
“The evenings that come when my lover has gone away
are like slayer coming to
slaughter place, to take life away”
இன்றெனது குறள்:
அன்பர் பிரிவில்
வரும்மாலை கொல்லிடத்தே
ஒன்னார்போல்
வந்துயிர்கொள் ளும்
anbar
pirivil varummAlai kolliDattE
oNNarpOl
vanduyirkoL Lum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam