ஆகஸ்ட் 31, 2015

குறளின் குரல் - 1229

31st Aug, 2015

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.
                           (குறள் 1223: பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)

பனி அரும்பிப் - பனித் துளி பூத்து
பைதல் கொள் - பசலை படர்ந்தது
மாலை - மாலை பொழுதுக்கு (முன்னர் நானும் அவரும் கூடிய காலை)
துனி அரும்பித் - வெறுப்பு பூத்து
துன்பம் வளர வரும் - துன்பமே வளர்கிறது, இம்மாலையால் இன்று

பனி பூத்து, நான் பசலை கொள்ளும்படியான வேளையான மாலை, இப்போது நான் என் உயிரையே வெறுக்கும்படியாக, என் துன்பம் மேலும் வளர வந்துகொண்டிருக்கிறதே என்று வரப்போகும் மாலைப் பொழுதை நினைத்து கவலையுறுகிறாள்.

உரையாசிரியர்கள் பலரும் இக்குறளுக்கான உரையைச் சரியாக எழுதவில்லை என்றே தோன்றுகிறது. என் தலைவன் என்னை நீங்கி இருப்பதால், பனி பூத்த மாலை வேளைகள் எனக்கு மேலும் பசலையைத் தருவன. அத்தகைய மாலைப் பொழுது, மீண்டும் என் துன்பம் வளர வந்து கொண்டே இருக்கிறது. ஆனால், பனி பூத்தல், என்பதை மாலை நேரத்துக்குப் பசலைப் பூத்ததென எழுதியிருக்கின்றனர்.  இது பொருந்தா கற்பனையாக விளக்கமாக உள்ளது.

மணக்குடவர், பரிமேலழகருக்கு முந்தியவர்; இவர் உரை மிகவும் பொருந்துவதாக உள்ளது. படரைத் தலைவிக்குத் தந்த மாலைப் பொழுது தானும் துன்புற்றதாகக் கூறி, அது மீண்டும் வருவதற்காக அவள் வெறுப்பும் துன்பமும் கொள்வதாகக் கூறுகிறார். இதுவே முற்றிலும் சரி. “இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது” என்று கூறி முடிக்கிறார்.

Transliteration:

Paniarumbip paidalkoL mAlai thuniyarumbit
Tunbam vaLara varum

Paniarumbip – With mist set in
paidalkoL – that which gives paleness
mAlai – this evening
thuniyarumbit – for the hate to blossom in me
Tunbam vaLara varum – and for the pain to grow in me, comes here again.

With mist set in, these evenings make me go pale always; For me to hate it and be painful, the evening is coming again, says the worried and the love-struck maiden about the onset of evening.

Most commentators, including venerated Parimelazhagar have interpreted the verse as if the evening has grown pale, which seems like a nice imaginative interpretation for some other context; But in this verse, what ManakkuDavar that wrote commentary before Parimelazhagar, has interpreted  seems more apt, just not interpreting beyond what the verse conveys.  He says, the mist blossomed evening that gave paleness to the maiden in love always, is feared by the maiden as it is coming again, as the evening is approaching again.

“The mist blossomed evening that makes me grow pale
 is back again for me to hate it and be painful without fail”


இன்றெனது  குறள்:

பனிபெய் படர்தரும் மாலையே மீண்டும்
நனித்துன்பு கூட்டவரு மின்று

panipei paDartarum mAlaiyE mINDum
nanittunbu kUTTavaru minRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...