செப்டம்பர் 05, 2015

குறளின் குரல் - 1234

5th Sep, 2015

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
                           (குறள் 1228: பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)

அழல்போலும் மாலைக்குத் - நெருப்பினைப் போன்று காமநெருப்பால் வாட்டும் மாலைக்கு
தூதாகி - தூதுவனாக வருவதுபோல் வருகின்ற
ஆயன் குழல்போலும் - இடையன் வாசிக்கும் குழலிசையானது
கொல்லும் படை - கொல்லும் கருவிபோல் ஓசையிடுகிறதே.

நெருப்பைப் போல் என்னைக் காமத்தீயில் வாட்டுகிற மாலைப் பொழுதுக்குத் தூதுவனைப் போல் வருகிற இடையன் குழலிசை, கொல்லும் கருவிபோல் ஒலிக்கிறதே என்று காதற்தலைவி நோகிறாளாம்.

குழலிசையும், மாலை நேரமும் சேர்த்து வருத்துதலை நற்றிணை, அகநாகனூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்கள் கூறுகின்றன.

“கொடுங்கோற் கோவலர் குழலோ டொன்றி
ஐதுவந்த் திசைக்கும் அருளில் மாலை” (நற்றிணை: 69:8-9)

“கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய் சிறுகுழல் வருந்தாக் காலே” (அகநானூறு:74:16-17)

Transliteration:

azalpOlum mAlaikku tUdAgi Ayan
kuzahlpOlum kollum paDai

azalpOlum mAlaikku  for the evening that torments like a hot fire,
tUdAgi – as emissary
Ayan kuzahlpOlum – the shepherds’ music with flute
kollum paDai – sounds like a murderous weapon

For the evening that torments me like hot fire, the sheperds’ flute music is playing the role of an emissary; but it sounds like a murderous weapon to me, complains about the evening and the flute music played by the shepherd, which is otherwise sweet.

Many examples linking the evening and the flute music are strewn across many literary works like NaRRiNai, AganAnUru and kalittogai etc,, in a similar context.

“The Sheperds’ flute that comes as an emissary for the evening
 sounds like a fiery murder weapon, to the maiden complaining”


இன்றெனது  குறள்:

தழல்போலாம் மாலைக்குத் தூதன்ன ஆயன்
குழலிசை கொல்படை போன்று

tazhakpOlAm mAlaikkut tUdanna Ayan
kuzhalisai kolpaDai pOnRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...