நண்பர்கள் தினமென்று இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரே முகநூல் பரிவர்த்தனைகளும், மின்னஞ்சல் பரிவர்த்தனைகளுமாக அமர்க்களப்பட்டது. இதே போன்றே அம்மாக்கள் தினம், அப்பாக்கள் தினமென்றும் பல நினைவு நாட்களையும் நாம் கொண்டாடுகிறோம். மேற்கத்திய பழக்கங்களைக் கைக்கொண்டுவிட்ட நாம், அவர்களைப் போலவே, சிறு குடும்பங்களாய் சிதறிப்போனது காலத்தின் கட்டாயமானாலும், எல்லா உறவுகளையும் உதட்டளவில் கொண்டாடி, கைநீளும் தொலைவில் இருத்தப் பழகிவிட்டோம். உண்மையான உறவுகள் உள்ளத்தில் என்றும் இருப்பவை அல்லவா? அவ்வாறு நினைத்துவிட்டால் தனி நாட்கள் தேவையில்லையே.. நாமும் நம்முறவுகளை அவர்கள் உலகை நீத்த பிறகு வருடத்துக்கு ஒருநாள் நினைப்பவர்கள்தாம்.. திதி கொடுப்பவர்கள்தாம்.. நாம் அந்த அளவுக்கா எல்லா உறவுகளையும் கொண்டுவந்துவிட்டோம்? இவையெல்லாம் திவச தினங்கள்தாமா? அந்த ஆதங்கத்தில் எழுதப்பட்டது இது.
அன்னைதனக் கொருநாளும் அப்பாவுக் கொருநாளும்
என்னருமை நட்புறவைக் கொண்டாட ஒருநாளும்
முன்னமேதாம் முடிந்துவிட்ட முன்னோருக் கொருநாளும்
அன்றாட வணிகத்துக் காதாரம் என்னாளும்
உறவுகளை வர்த்தகமாய் ஓருநாளின் நினைவதுவாய்
மறந்தாலும் தவறில்லை மற்றநாளில் என்பதுபோல்
துறந்தோமே மொத்தமாகத் தொலைதோமே உணர்வுகளை
இறந்தவைகள் முகநூலில் இணையத்தில் முகம்காட்ட
அகமும்தான் செத்துப்போய் அணுக்கங்கள் அற்றுப்போய்
முகத்தளவில் காட்டும்பொய் முறுவலையே உதட்டளவில்
இகத்தில்நாம் பழகிவிட்டோம் இனிமைகளை புறக்கணித்து
செகமேநீ பூச்சுறவில் செல்லரித்துப் போவாயோ?
உண்மையான உறவுக்கு ஒருநாள்தான் ஒதுக்குவமோ?
எண்ணத்தில் ஏற்றிவைத்து என்றென்றும் நினைக்கமாட்டோம்?
வண்ணமய வாழ்விதையே வர்த்தகமாய் வாழாமல்
கொண்டாட உறவுகளை கோடியின்பம் என்றுமுண்டு
என்னருமை நட்புறவைக் கொண்டாட ஒருநாளும்
முன்னமேதாம் முடிந்துவிட்ட முன்னோருக் கொருநாளும்
அன்றாட வணிகத்துக் காதாரம் என்னாளும்
மறந்தாலும் தவறில்லை மற்றநாளில் என்பதுபோல்
துறந்தோமே மொத்தமாகத் தொலைதோமே உணர்வுகளை
இறந்தவைகள் முகநூலில் இணையத்தில் முகம்காட்ட
முகத்தளவில் காட்டும்பொய் முறுவலையே உதட்டளவில்
இகத்தில்நாம் பழகிவிட்டோம் இனிமைகளை புறக்கணித்து
செகமேநீ பூச்சுறவில் செல்லரித்துப் போவாயோ?
எண்ணத்தில் ஏற்றிவைத்து என்றென்றும் நினைக்கமாட்டோம்?
வண்ணமய வாழ்விதையே வர்த்தகமாய் வாழாமல்
கொண்டாட உறவுகளை கோடியின்பம் என்றுமுண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam