7th Aug, 2015
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
(குறள் 1199:
தனிப்படர் மிகுதி அதிகாரம்)
நசைஇயார் - காதலியால் விரும்பபட்டவர்
நல்கார் எனினும் - அன்பொழுகாராயினும்
அவர்மாட்டு இசையும் - அவர் வாய்மொழி என்பது ஏதாயினும்
இனிய செவிக்கு - அவை காதலியின் செவிக்கு இனிமையாம்
காதலியால்
விரும்பப்பட்டவர் அவள் மீது அன்பொழுகாராயினும், காதலியைப் பொருத்தவரை, அவர் வாயிலிருந்து
வரும் எம்மொழியும் இன்மொழியே என்று காதற்பெண்டிரின் அன்பின் எல்லையை உணர்த்தும் குறள்.
பரிமேலழகர் கூறுவது போல், காதலர் நான் திரும்பி வந்து உன்னைச் சேரேன் என்ற சொல்லும்
கூட! அவள் அதை விரும்புவதால் அல்ல, அவள் காதலன் அது காரணம் பற்றியாது தன்னைப் பற்றி
சிந்திக்கிறாரே என்று.
Transliteration:
nasaiiyAr nalgAr eninum avarmATTu
isaiyum iniya sevikku
nasaiiyAr – her sweet heart that she loves so
much
nalgAr eninum – though won’t reciprocate the love
avarmATTu isaiyum – whatever he says
iniya sevikku – they are sweet to her ears.
Though her sweet heart that she is in
love with so much, does not reciprocate her love, whatever is heard from him is
still sweet to her ears, indicating the extent of her love for him.
ParimElazagar says that even if he said that he would not return to her,
listening to his words would still be good to her ears, not because that he
would not return, but at least on that account that he thought about her.
“Though not reciprocative, his words are sweet
whatever they are still, for
he is her sweetheart”
இன்றெனது குறள்:
அன்பிலர்
ஆயினும் அன்பர்தம் வாய்மொழி
கன்னலே காதற்பெண்
டிற்கு
anbilar
Ayinum Anbartam vAimozhi
kannalE
kAdaRpeN DiRku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam