ஆகஸ்ட் 24, 2015

குறளின் குரல் - 1222

24th Aug, 2015

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
                           (குறள் 1216: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்)

நனவென ஒன்று இல்லை ஆயின்  - விழித்திருக்கும் நிலை என்ற ஒன்று இல்லாதிருந்தால்
கனவினால் - கனவு நிலை நீட்டித்து
காதலர் நீங்கலர் மன் - அதன் காரணமாக கனவில் கூடி இன்புற்ற காதலர் நீங்கி செல்லாரன்றோ?

காதலி கனவு நிலையிலிருந்து விழித்திருக்கும் நிலைக்கு வர விரும்பாத காரணத்தைக் கூறுகிறாள். கனவிலே கூடி மகிழ்ந்த தன் காதலர் விழித்துக்கொள்கையிலே தன்னோடு இருக்க மாட்டாரே, அதனால் விழித்திருக்கும் நிலையில்லையென்றால், கனவு நிலை நீட்டித்து அதன் காரணமாக காதலரும் நீங்கிச் செல்லார் என்று அவள் கூறுகிறாள்.

Transliteration:

Nanavena onRillai Ayin kanavinAl
kAdalar nIngalar man

Nanavena onRillai Ayin – If there is no wakeful state
kanavinAl – the state of dream (in sleep) would extend
kAdalar nIngalar man – and because of that the lover would not leave.

In this verse, the maiden expresses her desire that she does not want to come to wakeful state from her slumber where she enjoys the conjugal embrace of her lover indirectly. She says, if there is no wakeful state at all, my dreams would extend and my lover would not leave at all.

“If there was nothing such as a wakeful state,
my lover would not leave from my dream state”


இன்றெனது  குறள்:

விழிப்பென் பதில்லையென் றாலென் கனவும்
அழியாதென் அன்பரும்நீங் கார்

vizhippen badillaiyen RAlen kanavum
azhiyAden anbarumnIn gAr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...