ஆகஸ்ட் 23, 2015

குறளின் குரல் - 1221


23rd Aug, 2015

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
                           (குறள் 1215: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்)

நனவினால் - முன்பு விழித்திருந்தபோது
கண்டதூஉம் - (என் காதலரோடு) - கண்டு கூடியதும் இன்பமே
ஆங்கே கனவுந்தான் - அதேபோன்று கனவிலேயும்
கண்ட பொழுதே - அவரைக் கண்டு கூடிய இன்பமும்
இனிது -  இனிதே.

என் காதலரை நான் நனவில் கண்டு கூடியதெல்லாம் இனிமையே. அதேபோல அவரை என் கனவில் கண்டு நான் முயங்கிக் கூடியிருந்ததும், இனிமையேயென்கிறாள் காதற் தலைவி. கனவேயாயினும், காதலனோடு கூடியிருத்தலை இன்பம் என்று உணர்ந்தவளின் கூற்று இது. என்ன இருந்தாலும் ஒருவர் நினைவில் துய்க்கும் போலாகுமா, கனவில் காண்பது என்றாளுக்கு இவள் கூறியது.

விழிப்பு, கனவு, ஆழ் துயில் (ஜாக்ரதா, ஸ்வப்னம், ஸுஷூப்தி) என்ற மூன்று நிலைகளில் ஆழ் துயிலைத் தவிர, மற்ற இரு நிலைகளிலும் காண்பவை எல்லாம் நமக்கு உண்மையில் நடப்பதைப் போல பெரும்பாலோரும் அனுபவத்தில் காண்பதே! அவ்வகையிலும் காதற்தலைவியின் கூற்று உண்மையே.

Transliteration:

nanavinAl kaNDadUum AngE kanavundAn
kaNDA pozhudE inidu

nanavinAl – In our wakeful hours
kaNDadUum – to be in his embrace was pleasurable
AngE kanavundAn – likewise, even in dreams
kaNDA pozhudE – to be in his embrace
inidu – is similarly pleasurable.

When I was in his embrace during wakeful hours, it was pleasurable. Likewise, even in dreams the embrace with him is equally pleasurable. The maiden implies, though it is dream, the embrace that is only imaginary, is still pleasurable. Perhaps she answers to her friends’ question if the pleasure in dream would be the same as that in her wakeful state.

Among the three states of human existence -wakeful, dreamy sleep, deep sleep – except the deep sleep state, in other two states the mind goes through the pains and pleasures of happening, except that they are real in the wakeful state, and in dreamy state, not felt once a person wakes up.

“Embrace in wakeful hours with my lover was sweet
 Likewise, even during dreams, equally it was a treat”


இன்றெனது  குறள்:

நனவில் முயக்கம் இனிதே அதேபோல்
கனவில் முயக்கம் இனிது

nanavil muyakkam inidE adEpOl
kanavil muyakkam inidu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...