15th Aug, 2015
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
(குறள் 1207:
நினைந்தவர் புலம்பல் அதிகாரம்)
மறப்பின் - அவரை நான் மறந்தால்
எவனாவன் மன்கொல் - என்ன ஆவேனோ
மறப்பறியேன் - நான் அவரை மறந்திலேன்
உள்ளினும் - அவரை நினைதொறும்
உள்ளம் சுடும் - என் உள்ளமானது சுடுகிறதே
அவரை நீ மறப்பதே நன்று என்று கூறும் தோழிக்கு,
காதற் தலைவி இவ்வாறு கூறுவாளாயினள்: அவரை மறப்பதை
எவ்வாறென்று யான் அறிந்திலேன். அவரை நினைதொறும் என் உள்ளமானது நெருப்பன்ன சுடுகிறது,
தவிரவும் அவரை மறந்தால் நான் என்ன ஆவேனோ என்றும் அறியேன். அவரை மறவாமல் நினைக்கும்
போதே இக்காமமானது என்னை வாட்டுகிறதே. மறந்தால் மற்றென்ன செய்யுமோ என்று நினைக்கிறாளாம்
காதற்தலைவி.
Transliteration:
maRppin evanAvan maRkol maRappariyEn
uLLinum uLLam chuDum
maRppin – if I forget him
evanAvan maRkol – what would happen to me?
maRappariyEn- I have not known how to forget him
uLLinum – whenever I think of him
uLLam chuDum – my heart burns.
The maiden in love tells her friend, who
probably advises her to forget her lover this: I don’t know how to forget him;
whenever I think of him, my heart burns with the desire to be in his embrace. When
such is my state, what shall happen to me if I forget him? And what would this
desire to be with him, do to me?, worries the maiden.
“What would be my state if I forget him; and I know not how to
Whenever I think of him, this
desire to be with, burns me too”
இன்றெனது குறள்:
மறவா நினைக்கினும்
உள்ளஞ் சுடுமே
மறந்தாலோ
என்னாவே னோ?
maRvA ninakkinum uLLanj chuDumE
maRandAlO ennAvE nO?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam