14th Aug, 2015
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.
(குறள் 1206:
நினைந்தவர் புலம்பல் அதிகாரம்)
மற்றியான் - நான் அவ்வாறு எண்ணுதலை தவிர்த்து (பின்னால்
வரப்போவது)
என்னுளேன் மன்னோ - எவ்வாறு உயிர்த்திருப்பேன்
அவரொடியான் - அவரோடு நான்
உற்றநாள் - கூடி இருந்த நாட்களை
உள்ள உளேன் - உள்ளத்தில் எண்ணுவதாலேயே உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
பிறிவாற்றாது வருந்தும் காதற் தலைவியை நோக்கி,
நீ அவரை மறந்து விடுவதே உனக்கு நலம் பயக்கும் என்னும் தோழிக்கு அவள் இவ்வாறு உரைப்பாள்.
ஏதோ அவரோடு கூடி முயங்கி இருந்த நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதாலேயே நான் உயிரோடு வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்; அன்றியும் நான் எப்படி உயிர்
வாழமுடியும்?
கிருஷ்ணாவதாரத்தில் ராதையிடம் அவள் தோழி, அடீ!
இதோ கிருஷ்ணன் பிருந்தாவனத்தை விட்டு, துவாரகைக்குப் போகிறானே உன்னைவிட்டு! நீ வருந்தவில்லையா
என்கிறாளாம். அதற்கு ராதை, போகட்டுமே, கிருஷ்ணன் நினைவொன்றே, அவனோடு நானும் மற்ற கோபியரும்
இந்த பிருந்தாவனத்தில் கூடி இருந்த நாட்களின் நினைவுகளே நான் உயிர்த்திருக்கப் போதுமானது
என்பாளாம்.
Transliteration:
maRRiyAn ennuLEn mannO avaroDiyAn
uRRanAL uLLa uLEn
maRRiyAn – Without without thinking of that (what?)
ennuLEn mannO – how would I continue to have life?
avaroDiyAn – with him, myself
uRRa nAL – the days I spent with him in his
companionship
uLLa uLEn – I live only thinking about those days
The maiden’s friend advises her to
forget her estranged lover; to which she replies thus: Because of the thoughts
about the days I was in his company, this life of mine is sustaining still.
Without those thoughts, how else would I live?
A wild imagination about Krishna leaving
Brindavana to Dwaraka narrates a situation similar to this by a poet. Radhas’
friend tells her that all other gopiaks are crying holding Krishnas’ chariots
wheels, because he is about to leave once and for all for Dwaraka; how come she
is not crying like others? Radha answers, the very thoughts about the days, we
all spent here in Rasakreeda are enough for her to sustain her life.
“Other than thinking about the days that I spent
with him, how else would my
life sustain, spent?”
இன்றெனது குறள்:
அன்பரைக்
கூடிய நாளெண்ணி நான்வாழ்ந்தேன்
அன்றியும்
எவ்வாறென் வாழ்வு?
Anbaraik kUDiya nALeNNi nAnvAzhndEn
anRiyum evvARen vAzhvu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam