ஆகஸ்ட் 16, 2015

குறளின் குரல் - 1214

16th Aug, 2015

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
                           (குறள் 1208: நினைந்தவர் புலம்பல் அதிகாரம்)

எனைத்து நினைப்பினும் - நான் எவ்வளவு அவரை நினைத்துக் கொண்டிருந்தாலும்,
காயார் - அதன்பொருட்டு என்னை வெகுளார்
அனைத்தன்றோ - அம்மட்டே அன்றோ
காதலர் செய்யும் - என்னுடைய காதலர் எனக்கு செய்யும்
சிறப்பு - உதவி, இன்பம் எல்லாம்?

தோழி காதற் தலைவியிடம், நீ கவலையுறாதே! உன்னுடைய காதலர் மீண்டும் வந்து உன்னை அணைவார், இன்பர் தருவார் என்றாளாம். அதற்குக் காதற் தலைவி, இவ்வாறு எண்ணிச் சொல்லுகிறாள். “அது சரி! நீ வேறு! ஏதோ இம்மட்டில் நான் அவரை இடையறாது நினைத்துக்கொண்டிருப்பதற்கு தடைச் சொல்லி வெகுளாமல் இருக்கிறாரே! அதுவே பெரிதன்றோ. அவ்வளவே என்னுடைய காதலர் என்னுடைய பிரிவாற்றாமைக்கு ஆற்றும் உதவி, தரும் இன்பமெல்லாம்” - தோழி கூற்றினை இகழ்ந்து இவ்வாறு கூறுகிறாள் காதற் தலைவி.

Transliteration:

Enaittu ninaippinum kAyAr anaittanRO
kAdalar seyyum siRappu

Enaittu ninaippinum – However much I keep thinking about him
kAyAr – he won’t get angered with me for that.
anaittanRO – only that much is
kAdalar seyyum – my lover, doing
siRappu – the best, he is able to do (or the happiness)

The friend of the maiden in love, says to her, not to worry and that her lover would be back to be with her soon. The maiden replies sarcastically to her friend thus: “Glad you’re so hopeful! I am very gratefule and happy that he is not angry with me because I keep thinking of him incessantly. At least that much he helps me or given me space to think about him. That is the extent to which he is being helpful to alleviate my pain of this separation.”. The tone of sarcasm in this verse is indeed alluring.

“He is not angry despite my thinking of him incessantly,
 That is the extent to which, he honors my love dearly”


இன்றெனது  குறள்:

எத்தனை எண்ணினும் என்னைச் சினவாரே
அத்தன்மைத் தன்பர்செய் இன்பு

ettanai eNNinum ennaich cinavArE
attanmait tanbarsei inbu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...