11th Aug, 2015
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
(குறள்
1203: நினைந்தவர்
புலம்பல் அதிகாரம்)
நினைப்பவர் போன்று - என்னை நினைப்பவர்
போன்றிருந்து
நினையார்கொல் - பின் என்னைப் பற்றி நினைக்க மாட்டாரோ?
தும்மல் சினைப்பது போன்று - தும்மல் அரும்புதல் நாசிகளில்
தோன்றி பின்பு நின்றுவிடுவதுபோல்
கெடும் -அவருடைய என்னைப்பற்றிய எண்ணமும் பாதியிலேயே
நின்றுப்போகிறது.
சில நேரங்களில் தும்மலானது
நாசியைக் குடைந்து வருவதுபோல் தொடங்கி, அதற்கு ஆயத்தம் ஆகும்போது வாராது நின்றுப்போகும்.
அதே போல் என்னுடைய காதலுக்கு உரியவரும் என்னை நினைப்பது போல தோன்றச் செய்து, பின்பு
நினையாமல் இருந்துவிடுவாரோ? இவ்வாறு காதலாழ்பட்ட இருவருமே நினைப்பார்களாம். குறளின்
போக்கு, இருபாலருக்கும் பொருந்துவதாகவே இருந்தாலும், பரிமேலழகர் உட்பட்ட எல்லா உரையாசிரியர்கள்
மீண்டும், இதை பெண்டிருக்கு மட்டும் பொருந்துவதாகச் உரை செய்துள்ளனர்.
Transliteration:
Ninaippavar pOnRu ninaiyArkol thummal
chinaippadu pOnRu keDum
Ninaippavar pOnRu – As if he/she was going to think about
me always
ninaiyArkol – then would probably not think?
thummal chinaippadu pOnRu – Like how sneeze sometimes cheats
after teasing to burst
keDum – Would his/her thoughts stop half way,
dropping me, not thinking?
Sometimes sneez would start as if it was
going burst and half way, it would stop after teasing the nostrils for a few
seconds. Would my beloved also do similarly, appearing to be holding thoughts
about me, and then not think about me? This seems to be the thought dominating
the minds of people that suffer the separation. This verse, though structured
to be common to both genders (perhaps transgenders and same sex partners, as
the society has become more accepting), most commentators have said it from the
perspective of a maiden in love.
“Just like the cheating sneeze half-way stopping
Not thinking would my
beloved also be dropping?”
இன்றெனது குறள்:
வாராக்
கெடும்தும்மல் போலே நினையாரோ
வாரா நினைவது
கெட்டு?
vArAk
keDumtummal pOlE ninaiyArO
vArA
ninaivadu keTTu?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam