10th Aug, 2015
எனைத்தொன் றினிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்.
(குறள் 1202:
நினைந்தவர் புலம்பல் அதிகாரம்)
எனைத்தொன்று - எவ்வாறு பார்த்தாலும்
இனிதேகாண்
காமம் - காதலானது இனிமையேதான்
தாம் வீழ்வார் நினைப்ப - தாம் விரும்புவாரை நினைக்கும் போதெல்லாம்
வருவதொன்று இல் - துன்பம்தான் வருவதில்லையே
பிரிந்திருக்க நேரினும் காதலாழ்பட்ட இருவருக்கு,
தாம் காதலில் வீழ்ந்தவரை நினைக்குபோதெல்லாம் துன்பமே வருவதில்லை. ஆதலால் கூடி இருக்கும்
போதும், பிரிந்திருக்கும் போது காதல் இனிமையேயன்றி வேறில்லை. இக்குறள் காதலின் வலிமையை,
உண்மையைப் பற்றி பேசுகிறது. காதலின் இன்பமேயன்றி துன்பமில்லை.என்பதை அழகாகக் கூறுகிறார்
வள்ளுவர்.
Transliteration:
Enaiththon RindEkAN kAmamtAm vIzhvAr
ninaippa varuvadonRu il
EnaiththonR(u) – whichever way seen,
indEkAN kAmam – the love is sweet
tAm vIzhvAr ninaippa – whenever they think about their
mutual beloved
varuvadonRu il – there is no misery?
Though by force of circumstances, the
lovers are away from each other, whenever they mutually think about each other,
the separation is never painful; hence it is always a pleasure while they are
together or apart? Valluvar depicts the strength of true love and there is always
happiness and pleasure only in love.
“The thoughts about the beloved never lets, misery set in
Hence, love is happiness and
pleasure combined in one”
இன்றெனது குறள்:
காதல்கொண்
டாரை நினைதொறும் துன்பிலை
ஆதலால் அஃதினிதே
யாம்
kAdalkoN DArai ninaitoRum thunbilai
AdalAl ahdinidE yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam