121:
(Lamenting in Sad memories - நினைந்தவர் புலம்பல்)
[In this
chapter, both maiden and her man, being separated, keep thinking of each other
and reminisce their togetherness and lament in sadness of present state of
being away from each other.]
9th Aug, 2015
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
(குறள் 1201:
நினைந்தவர் புலம்பல் அதிகாரம்)
உள்ளினும் தீராப் - நினைக்க நினைக்க முடிவில்லாத
பெருமகிழ் செய்தலால் - பெரு மகிழ்வைத் தருவதால்
கள்ளினும் - போதை தரும் கள்ளினைக் காட்டிலும்
காமம் இனிது - என்னவளோடு/என்னவரோடு கொள்ளும் புணர்ச்சி
முயக்கம் இனிமையானது
இக்குறள் பொதுப்படையாகக்
கூறப்பட்டதால், காதற் தலைவன், தலைவி இருவருக்குமே பொருந்துவதாம். இருவருமே போதை தரும்
கள்ளினை விட அவர்கள் கூடி முயங்கும் காமமே நினைக்குந்தோறும் பெரும் இன்பம் தருவது என்று எண்ணுகிறார்களாம்.
காதற் பெண்ணுக்கு
வள்ளுவர் காலத்தில் கள்ளருந்திய அனுபவம் இருந்திருக்குமா என்று தெரியாது. இருந்திராது
என்று கொள்ளுதலே பொருந்தும். அவ்வாறாயின் அவள் கள்ளருந்தலை மகிழ்வின் அளவாகக் கொண்டிருக்க
இயலாது. அதனால் இக்குறள் தலைவன் எண்ணத்தையே சொல்வதாகக் கொள்ளலாம். தவிரவும் காமத்தின்
இன்பத்தை நற்குடிப் பெண்டிர் வெளிப்படையாகச் சொல்லவும் மாட்டார்.
Transliteration:
uLLinum tIrAp perumagizh seidalAl
kaLLinum kAmam inidu
uLLinum tIrAp – even if thought again and again,
never ending
perumagizh seidalAl – since it gives extreme happiness
kaLLinum – more than toddy
kAmam inidu – love is sweeter.
Through out
this chapter all verses expression emotions that are common to both a man and
his maiden bonded by love. Since the love and being together is more
pleasurable, however many times it is remembered and recalled in their minds,
such love is sweeter than the toddy that intoxicates, to both of them.
It is not
clear if women had the habit of drinking toddy and it is very possible that
they did not. If women did not drink toddy, it would not be an experiential
comparision for them; hence this verse could be construed to be expressing what
the man feels.
Loves gives joy, every time it’s
remembered
Hence sweeter than toddy, it’s considered”
இன்றெனது குறள்:
நினைத்தால்
இனிக்குமே காமம் அதனால்
பனைமரக்
கள்ளின் இனிது
ninaithAl inikkumE kAmam adanAl
panaimarak kaLLin inidu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam