12th Aug, 2015
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
(குறள் 1204:
நினைந்தவர் புலம்பல் அதிகாரம்)
யாமும் உளேங்கொல் - (அதேபோல) நானும் இருக்கிறேனோ?
அவர் நெஞ்சத்து - என் காதலர் உள்ளத்திலே?
எந்நெஞ்சத்து - என் உள்ளத்திலே
ஓஒ உளரே அவர் - அவர்தானே இடையறாது இருக்கிறார்.
என் உள்ளத்திலே என் காதலரே எப்போதும், இடையறாது குடியிருக்கிறார். அதேபோன்று அவர் உள்ளத்தில் நானும், நான்மட்டும் இருப்பேனா? என்று தோழியிடம் கேட்கிறாள் காதற்தலைவி. அவ்வாறாயின் அவர் விரைவில் வந்துவிடுவார் அல்லவா என்று தோழியிடம் காதற்தலைவி அலமந்து பேசுகிறாள். இக்குறள் நிச்சயமாக காதற்தலைவியின் குரலாகவே ஒலிப்பதைக் காணலாம்.
Transliteration:
yAmum uLEngkol avar nenjathtu ennejaththu
OO uLarE avar.
yAmum uLEngkol – (similarly) Am I also there?
avar nenjathtu – in my beloved’s heart
ennejaththu – In my heart
OO uLarE avar – he is the only one that resides for ever
In my heart my
lover resides always; Similary am I in my beloved’s heart too? Wonders the
maiden in love. If that’s the case, would he not be back soon, the maiden asks her friend.
Most definitely this verse sounds like from the maidens’ mouth instead of being
common to both in love.
“My beloved resides always in my heart
Likewise, would I also be in his heart?”
இன்றெனது குறள்:
என்னுள்ளத்
துள்ளார் அவரே அவருள்ளம்
நின்றாளும்
நானேதா னோ?
ennuLLath
tuLLAr avarE avaruLLam
ninRALum
nAnEtA nO?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam