2nd
Aug, 2015
வீழப்
படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப்
படாஅர் எனின்.
(குறள் 1194: தனிப்படர் மிகுதி அதிகாரம்)
வீழப்படுவார்
- பிறரால் மதிக்கப்படுவாராயினும்
கெழீஇயிலர் - நல்வினையாளர் அல்லர், நண்பர்
அல்லர்.
தாம்வீழ்வார் - தாம் அன்பு செலுத்துபவர்,
தம் கணவர்
வீழப்படாஅர்
எனின் - விரும்பாதவர்
என்றால்
இக்குறளில்
காதலாழ்பட்ட பெண் தன் கணவனால் விரும்பப்படாதவர் பிறரால் மதிக்கப்பட்டாலும், நல்வினையாளராக,
தமக்கு நட்புறவில் இருக்கமுடியாது என்று எண்ணுவாள் எனப்படுகிறது. கற்புடைப் பெண்டிர்
கணவனே அன்றி பிறர் சொல்லுக்குக் கட்டுப்படார் என்பது அறிந்ததே. தம் கணவனால் விரும்ப்பப்படாத
ஒருவரை உலகே தூக்கிவைத்துக் கொண்டாடினும், அப்பெண்ணைப் பொருத்தவரை, அவர் நல்வினையாளராக
இருக்கமுடியாது என்பதே உணர்த்தப்படுகிற பொருள்.
இது
தருக்கமுறையில் உடன்பாடு கொள்ளவியலாத ஒன்று. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவள் கணவன் வாக்கே
மறைவாக்கு என்பது ஒரு கண்மூடித்தனமான பேதைமையையே குறிக்கும். தவிரவும் பெண்டிரின் சுய
அறிவு மற்றும் சிந்தனையை மறுப்பதாகவும் உள்ளது. இக்குறள் பெண்வர்க்கத்தின் ஒரு பொது
நிலைக் கருத்தையே கூறுவதாகத் உள்ளதே தவிர இவ்வதிகாரத்தில் கூட பொருந்துவதாகத் தெரியவில்லை,
வேண்டுமாகனால், கணவனைப் பிரிந்த காலத்து, அவள் இவ்வாறு சிந்திப்பாள் என்று கொண்டு கூட்டிப்
பொருள் கொள்ளலாம்.
Transliteration:
vIzhap
paDuvAr kezhIyilar tAmvIzhvAr
vIzhap
padAar enin
vIzhappaDuvAr – though respected by
others
kezhIyilar
– a person is considered devoid of good deeds and excellence and not a friend
also
tAmvIzhvAr
– if her beloved
vIzhappadAar
enin –
does not like that person
If
her beloved does not like a person, however much respected, the other person
is, as far as she is concerned, that person is devoid of good deeds and
excellence and hence can not be a friend; It is repeatedly said that chaste
women worship their beloved/husband and would not even look at other men and
consider the husbands words as the final authority. For such a woman, it is
natural that if her husband does think that somebody is good, then they are
bad, regardless of their status in the society.
This
is unacceptable logically and implies only a blind faith of a maiden on her
beloved; also it tags them to be devoid of independent thinking and intellect.
Also this verse itself seems to be a general thought and does not even fit in
this chapter as a pertinent one. Perhaps, we may interpret that women think so
when they are separated from their beloved to make some sense.
“Though
much respected by others, for her, he is devoid of excellence
that
who is not liked by her own beloved, and not a person of essence”
இன்றெனது
குறள்(கள்):
உலகே
விரும்பினும் அன்பருக் கொவ்வார்
அலர்நல்
வினையாள வர்க்கு
ulagE
virumbinum anbaruk kovvAR
alarnal
viNaiyALa varkku
உலகே
விரும்பினும் அன்பரொ டொவ்வார்
அலரேநம்
நட்புற வாய்
ulagE
virumbinum anbaro DovvAr
alarEnam naTpuRa vAi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam