1st Aug, 2015
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
(குறள் 1193:
தனிப்படர் மிகுதி அதிகாரம்)
வீழுநர் - தம்மால் விரும்பப்பட்டவரால்
வீழப்படுவார்க்கு - தாமும் விரும்பப்படுவார்க்கு
அமையுமே - ஏற்புடைத்திருக்கும்
வாழுநம் என்னும் - தம் காதலர் மீண்டும் வந்து தாம் காதல் வாழ்வு
சிறக்கும் என்கிற
செருக்கு - பெருமை
தாம் விரும்பிக் கணவராக அடைந்தவரால் தாமும்
மிக விரும்பப்படும் பெண்களுக்கு, ஏற்புடையதாம் பொருளீட்டலுக்காகப் பிரிந்திருந்தாலும்,
தம்முடைய கணவர் மீண்டும் தம்மோடு வந்து சேருவார், தம் காதல் வாழ்வு சிறக்கும் என்னும்
எண்ணம். சிறப்பாகச் சொல்ல வேறில்லாத, அதிகார நிரப்பிக் குறள்.
Transliteration:
vIzhunar vIzap paDuvArkku amaiyumE
vAzhunam ennum serukku
vIzhunar – that who she liked
vIzappaDuvArkku – liked in return by him equally
amaiyumE – will have
vAzhunam ennum – when he returns, life of love will
resume back
serukku – such pride
A maiden that is loved equally by her
husband that she loves dearly, shall have the pride that though her husband
might have left on his occupation and societal commitments, he would be back to
resume the life of love again with her for sure. Nothing different or exceptional
in this verse, except being a filler and towing along the lines of the general
theme of the chapter
“Pride that love will return is only for the maiden that fell
for her man and knows that his love for is not less equal”
இன்றெனது குறள்:
விரும்பிய
அன்பரின் காதலுற் றார்க்கு
தருக்குண்டே
வாழ்துமென் று
virumbiya anbarin kAdaluR RArkku
tarukkuNDE vazhudumen Ru
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam