ஆகஸ்ட் 03, 2015

குறளின் குரல் - 1201

3rd Aug, 2015

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
                           (குறள் 1195: தனிப்படர் மிகுதி அதிகாரம்)

நாம் காதல் கொண்டார் - நான் காதல் கொண்டவர்
நமக்கெவன் செய்பவோ - எமக்கு என்ன நன்மை /இன்பம் செய்து விடுவார்
தாம் காதல் கொள்ளாக் கடை. - தாமும் எம்பால் காதல் கொள்ளார் எனின்

நான் அவர்பால் மிகுந்த காதலைக் கொண்டிருக்கிறேன். அவர் அதேபோன்று என்மீது காதல் கொள்ளார் என்றால், எனக்கு என்ன நன்மையோ அல்லது இன்பத்தையோ அவர் செய்விடப்போகிறார். நான் அவர்மேல் கொண்ட காதலால் உற்றது துன்பமே. என்மேல் அவரும் காதலுடையவராயிருந்தால், அவர் என்னை படர் துன்பம் பட விட்டுச் சென்றிருக்கமாட்டார் அல்லவா என்று உணர்த்தி, காதற்கிழத்தி இக்குறளில் கூறுகிறாள்.

Transliteration:

nAmkAdal koNDAr namkkEvan seibavO
tAmkAdal koLLAk kaDai

nAmkAdal koNDAr – The man I love so dearly
namkkEvan seibavO – what good or pleasure he would do?
tAmkAdal koLLAk kaDai – if he does not equally reciprocate the same.

I love him so dearly. If he does not reciprocate the same, what good or pleasure he can do or give, asks the maiden in this verse. She implies that if he had reciprocated my love, he would not have left me to suffer this loss of hue and luster.

“What pleasure would the man that I love so much
 give, if he doesn’t even love me the same as such!”

இன்றெனது  குறள்:

என்னன்பர் தானுமவ் வாறன்பு செய்யாக்கால்
என்னன்மை செய்வார் எமக்கு?

Ennanbar tAnumav vARanbu seiyyAkkAl
Ennanmai seivAr emakku?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...